tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிறப்புச் சான்று கட்டாயம்

சென்னை: 2023 அக்டோபர் 1 ஆம் தேதிக் குப் பின் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டா யம். மற்றவர்கள் பாஸ் போர்ட் திருத்த விதிகள் 2025-ன் படி பிறப்பு சான்றாக மாற்று ஆவ ணங்களை சமர்ப்பிக்க லாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெண்டர் கோரிய மின்வாரியம்

சென்னை: தமி ழகத்தில் பசுமை மின் சாரத்தை சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்ட மைப்பை செயல்படுத்தும் திட்டத்துக்கு ஒப்பந்த நிறு வனத்தை தேர்வு செய்ய மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது. பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்ட மைப்பு ஏற்படுத்தும் நிறு வனங்களை ஊக்குவிக்க ஒன்றிய அரசு நிதியுதவி செய்கிறது. தமிழகத்தில் ஒரு மெகாவாட் கட்ட மைப்புக்கான மொத்த செலவில் 40 சதவீதம் வரை நிதியுதவி செய்யப் படுகிறது.

‘கொடி கூட ஏற்ற முடியவில்லை’  

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டத்தினை மேலும் வலுப் படுத்துவதற்காக சமூக  அமைப்புகள் மாநாடு சென்னையில் நடை பெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமா வளவன் கலந்து கொண்டு  பேசுகையில், “ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டு களுக்குப் பின் தமிழ கத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. 4 எம்.எல்.ஏ க்கள், 2 எம்.பிக்கள் இருந்தும்கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடிய வில்லை. விடுதலை சிறுத் தைகள் கட்சி கொடியை ஏற்றும் போதுதான் அதி காரிகள் சட்டங்களை பேசு வார்கள். பேனர் வைத்தால்  அதை அகற்றிவிடு வார்கள். இதனால் அரசி யல்ரீதியாக வலிமை அடைய வேண்டிய தேவை இருக்கிறது. இது போதாது என்ற போதாமையை காட்டுகிறது” என்றார்.