சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் பழங்குடியின ஆன்றோர் மன்ற ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாநிலப் பொருளாளர் ஆ.பொன்னுசாமி ஆகியோர் தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார தேவைகள் குறித்து அமைச்சரிடம் அளித்த மனுவின் அம்சங்கள்:
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் இனச்சான்றுக்கான இணையவழி மற்றும் நேரடி விண்ணப்ப முறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். உரிய காலவரையறைக்குள் இனச்சான்று வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வருவாய்க் கோட்டாட்சி யர் இனச்சான்று வழங்கும்போது, மானிடவியல் ஆய்வாளர் அறிக் கையின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற அரசாணை 104-ஐ நீக்கி, ஆவணம் மற்றும் ஆதாரங் களின் அடிப்படையில் இனச்சான்று வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பட்டா வழங்க சிறப்பு முகாம் 2006 வன உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு மலைப்பகுதிகளில் வாழும் பூர்வகுடி பழங்குடி மக்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அனுபவ நிலத்திற்கு பட்டா கேட்டு காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் வன உரிமை சட்டத்தின்படி உடனடியாக பட்டா வழங்க வேண்டும். இதற்காக அனைத்து மலைப் பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
சுய தொழிலுக்கு நிதி உதவி
பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் சுய தொழில் தொடங்கு வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும், 50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க வழிவகை செய்ய வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒதுக்கிய நிதியை முழுமையாக பழங்குடி மக்கள் பயனடையும் வகையில் செலவிட வேண்டும். முதலமைச்சரால் தொடங்கப் பட்ட மகளிர் விடியல் பயணத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். பழங்குடி மக்களை முறையாக கணக்கெடு த்து, சிறப்பு குழுக்களை உரு வாக்கி சுய தொழில் தொடங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும்.
பணியிடங்களை நிரப்புதல்
பழங்குடியின மாணவர்களுக் கான உண்டு உறைவிடப் பள்ளி களின் கட்டிடங்களை புதுப்பித்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். அரசுத் துறை களில் பழங்குடியினருக்கான காலி பணியிடங்கள் மற்றும் பின்னடை வுப் பணியிடங்களை முழுமை யாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின கிராமங் களில் சாலை, குடிநீர், தெரு விளக்கு மற்றும் மின்சார வசதி களை நிறைவு செய்து தரவேண்டும். தொகுப்பு வீடுகள் வீட்டுமனை இல்லாத அனைத்து பழங்குடியினருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தர விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏற் கனவே கட்டப்பட்டு சேதமடைந் துள்ள தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். பழங்குடியின ஆன்றோர் மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்திக்க வேண்டியுள்ள தால், இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.