tamilnadu

உலகச் செய்திகள்

பார்படாஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பார்படாஸ் தொழிலாளர் கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி மீது மக்கள் திருப்தி அடைந்திருந்ததால் 30 இடங்களிலும் தங்களால் வெற்றி  பெற முடிந்தது என்று தொழிலாளர் கட்சி கருத்து தெரி வித்திருக்கிறது. குடியரச என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றுபட்ட நாடாக 2022 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நடத்தப் பட்டது என்று பிரதமர் மோட்லி குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாகத் தங்கள் கடல் எல்லையில் புகுந்த அமெரிக்கப் போர்க்கப்பலை எச்சரித்து திருப்பி அனுப்பியதாக சீன ராணுவம் கூறியுள்ளது. தென்  சீனக்கடலில் உள்ள பாராசெல் தீவுகளுக்கு அருகில்  அமெரிக்காவின் போர்க்கப்பல் யுஎஸ்எஸ் பென் போல்டு தென்பட்டது. உடனடியாக விரைந்த சீன விமா னப்படை அங்கு விரைந்து, உடனடியாக இடத்தைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டது. இது போன்ற நடவ டிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தங்கள் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவ லகங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் வங்கிகள் ஆணையிட்டுள்ளன. கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு தளர்த்தியிருப்பதால் ஸ்டாண்டர்டு அண்டு சார்ட்டர்டு வங்கி மற்றும் சிட்டி குழும வங்கி ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு அனைத்து வழிகளி லும் இந்தத் தகவலை அனுப்பியிருக்கின்றன. கோல்டு மேன் சாக்ஸ் வங்கியும் தகவல் அனுப்பவிருக்கிறது. உட னடியாக அலுவலகம் வந்தால் வரவேற்போம் என்று வேறு சில வங்கிகள் கூறியுள்ளன.