பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு கொண்டு வருவதை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் டிசம்பர் 16, 17 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலை மின்சார வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் தலைமையில் வெள்ளியன்று (டிச. 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் என்.ராஜகோபால், சி.பி.கிருஷ்ணன், இ.அருணாசலம் (ஏஐபிஇஏ), ராமபத்திரன் (ஏஐபிஒஏ), முரளி சௌந்தரராஜன் (ஏஐபிஒசி), ஜெர்ரி (ஐஎன்பிஒசி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.