மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட 23 ஆவது மாநாடு சிவகாசியில் டிசம்பர் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில், தத்துவார்த்த மாத இதழான மார்க்சிஸ்ட் 254 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.40,640-ஐ மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.குருசாமி வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.