போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி
ஈரோடு, அக்.19- ஈங்கூரில் மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி அண்மை யில் நடைபெற்றது. ஈரோடு, கொங்கு பொறியியல் கல்லூரி யின் மேலாண்மை துறை சார்பில், தேசிய மேலாண்மை வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி, ஈங்கூரில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற் படும் தீமை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இப்பேரணியில் ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
