tamilnadu

img

கேரளாவில் 5 ஆண்டுகளில் 15,000 ஸ்டார்ட்அப்கள்; 2 லட்சம் வேலை வாய்ப்புகள்

திருவனந்தபுரம், பிப்.20- கேரளாவில் ஐந்து ஆண்டுகளில், புதுமையான தொழில்நுட்பத் துறையில் (ஸ்டார்ட் அப்) கேரளத்தில் 15,000 ஸ்டார்ட்  அப்கள் தொடங்கப்படும். இத்துறையில் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்படும் என கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) ஏற்பாடு செய்துள்ள ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருக்கான ‘ஹடில் குளோபல் 2022’ என்ற இரண்டு நாள் குளோபல் விர்ச்சுவல் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் இதனைத் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளில் 15,000 ஸ்டார்ட்அப்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். 2015 க்கு பிறகு, ஸ்டார்ட்அப் துறை 3200 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. மேலும், கொச்சி யில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மண்டலத்தின் மாதிரியில் திரு வனந்தபுரத்தில் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட்அப் ஹப் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விழாவுக்குத் தலைமை வகித்த கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ்  பேசுகையில், உலகளாவிய தொழில்முனை வோர்களுடன் ‘ஸ்டார்ட்அப்’ திட்டத்தின் தொடர்பை வலுப்படுத்துவதில் ‘கேரள ஸ்டார்ட் அப் மிஷனுக்கு’ தனித்துவமான பங்கு உண்டு என்றார். இந்தியா ஆசியா வின் ஃபின்டெக் தலைநகராக மாறக்கூடும் என்று லண்டன் நகர மேயரும், டிஎல்ஏ பைப்பரின் பங்குதாரருமான ஆல்டர்மேன் வின்சென்ட் கீவ்னி கூறினார். உச்சிமாநாட்டின் முதல் நாளில், கூகுள் உடன் ஸ்டார்ட் அப்ஸ், ஹேபிறல், ஜெட்ரோ,  குளோபல் ஆக்சிலரேட்டார் நெட்ஒர்க், ஐஹப் குஜராத், நாஸ்காம், சிஎஸ்எல் ஆகிய வற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கேஎஸ்யுஎம் கையெழுத்திட்டது. மாநாட்டில் பல்வேறு அமர்வுகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளன. கேஎஸ்யுஎம் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜான் எம்.தாமஸ் வரவேற்றார்.

கூகுளுடன் கைகோர்த்த கேரளம்

கேரளா ஸ்டார்ட்அப் மிஷன், கூகுளின் ஸ்டார்ட்அப் மேம்பாட்டுப் பிரிவான ஸ்டார்ட் அப்களுக்கான கூகுளுடன் உலகளாவிய கூட்டாண்மையில் நுழைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஸ்டார்ட்அப்கள், ஸ்டார்ட்அப்களுக்கான கூகுளிடம் இருந்து அறிவுறுத்தல் மற்றும் பயிற்சியைப் பெறும். ‘கூகுள் ஸ்டார்ட்அப் ஆக்ஸிலரேட் டர் இந்தியா’வின் தலைவர் பால் ரவீந்திர நாத், ஹடில் குளோபல் உச்சிமாநாட்டின் போது கேரளாவுடனான ஒத்துழைப்பை அறிவித்தார். இதுகுறித்து ஜான் எம் தாமஸ் கூறுகையில், இந்த ஒத்துழைப்பு கேரள மாநிலத்தில் உள்ள ஸ்டார்ட்அப்கள் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் நுழைய உதவும் என்றார்.