tamilnadu

img

மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு!

மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு!

இராமேஸ்வரத்தில் எழுச்சியுடன் துவங்கியது

இராமநாதபுரம், ஆக. 6 - அகில இந்திய மீனவர்கள் மற்றும்  மீன்பிடித் தொழிலாளர்கள் கூட்ட மைப்பின் நான்காவது மாநாடு, இராம நாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் புதன்கிழமையன்று துவங்கியது. சங்கத்தின் அகில இந்தியத் தலை வர் தேபாசிஸ் பர்மன் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்தியத் தலைவர் கே. ஹேமலதா மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் புல்லுவிளா ஸ்டான்லி வேலை அறிக்  கையை தாக்கல் செய்தார். அகில இந்திய பொருளாளர் ஜி. மம்தா அஞ் சலி தீர்மானம் மற்றும் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். சிஐடியு மாநிலப் பொதுச்செயலா ளர் ஜி. சுகுமாறன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வி. குமார் ஆகி யோர் வாழ்த்துரையாற்றினர். அகில இந்திய மீனவர் சங்க நிர்வா கிகள் பாபா கிருஷ்ணா, ஷாஜகான், ஏ.  சபருல்லா, பி.பி. சித்தரஞ்சன், டி.  மனோகரன், கூட்டாய் பஷீர், ஏ.ஏ. சபுல்லா, சுதன்தாஸ், சிஐடியு மாவட்டச்  செயலாளர் எம். சிவாஜி, தமிழ்நாடு  மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப் பின் மாநில கௌரவத் தலைவர் ஜி.  செலஸ்டின், மாநிலப் பொதுச்செயலா ளர் எஸ். அந்தோணி, மாவட்டச் செய லாளர் என்.பி. செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தோழர் கருணா மூர்த்தி நினைவாக, அவரது வீட்டிலி ருந்து மாணவர் அரங்க மாவட்டச் செயலாளர் ஜாய்ஸி எடுத்துவந்த நினைவுச் சுடரை, சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா பெற்றுக்கொண்டார்.