விண்வெளிக்குச் செல்லும் ஏஐ ரோபோ ‘வயோமித்ரா’
கோவை: தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந் தார். கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தாண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தியை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் ‘வயோமித்ரா’ என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும். இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம். 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர் களை அனுப்பவுள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன” என்றார்.