உடலை ஸ்கேன் செய்யும் ஏஐ கண்ணாடி!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சி (Consumer Electronics Show) 2025-இல், உடலை ஸ்கேன் செய்யும் ஏஐ கண்ணாடி காட்சிப்படுத்தப்பட்டது. Withings நிறுவனம் வடிவமைத்துள்ள “Omnia” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடி, மனித உடலை ஸ்கேன் செய்து உடல் எடை, இதய ஆரோக்கியம், உடல் அமைப்பு, நுரையீரல் செயல் பாடு, தூக்கத்தின் தரம் மற்றும் வளர்சிதை மாற்றக் குறிகள் போன்ற அளவீடுகளை மதிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் AI voice Assistant வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது, உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோச னைகளை வழங்குவதுடன், மதிப்பாய்வு செய்வதற்குத் தரவுகளை மருத்துவருக்கு அனுப்பி வைக்கும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் புதிய அம்சங்களை இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் சேர்க்க உள்ளதாக Withings நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடி, ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது.
வாட்ஸ்அப்பில் கேமரா எஃபெக்ட்ஸ், செல்ஃபி ஸ்டிக்கர் அம்சம்!
வாட்ஸ்அ ப்பில் கேமரா எஃபெக்ட்ஸ் (Camera Effects), செல்ஃபி ஸ்டிக் கர்ஸ் (Selfie Stickers), குயிக் ரியாக்ஷன்ஸ் (Quick Reactions) ஆகிய புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கேமரா எஃபெக்ட்ஸ்: வாட்ஸ்அப்பில் புகைப்ப டங்கள் அல்லது வீடியோக் களை எடிட் செய்ய 30 Backgrounds, ஃபில்டர்ஸ், எஃபெக்ட்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. செல்ஃபி ஸ்டிக்கர்ஸ்: பயனர்கள் தங்கள் செல்ஃபியை ஸ்டிக்கராக மாற்றி, தங்களது நண்பர்களுக்கு அனுப்ப லாம். தற்போது, இந்த வசதி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டிக்கர் பேக்கு களை (Packs) மற்றவர்களுக்குப் பகிரும் வசதியும் வழங்கப் பட்டுள்ளது. குயிக் ரியாக்ஷன்ஸ்: வாட்ஸ்அப்பில் குயிக் ரியா க்ஷன்ஸ் வசதி இருந்தாலும், தற்போது மிக விரைவாக ரியாக்ஷன்களை அனுப்பும் வசதி வழங்கியுள்ளது. அதன்படி, மெசேஜை ‘double tap’ செய்தாலே உடனடியாக ரியாக்ட் செய்ய முடியும்.
க்ரோக் சாட்பாட்டின் வெப் வெர்ஷன் அறிமுகம்!
எக்ஸ் நிறுவனத்தின் க்ரோக் ஏஐ (Grok AI) சாட்பாட், தற்போது வெப் வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாட் ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளை போலவே க்ரோக் ஏஐ சாட்பாட்டும், படங்களை உருவாக்குவது, உரையைச் சுருக்குவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரோக் ஏஐ, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டணமின்றி பயனர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கட்டணமில்லா பயனர்களுக்கு, இரண்டு மணி நேரத்துக் கும் 10 ரெக்வெஸ்ட், ஒரு நாளுக்கு 3 படங்கள் ஆய்வு செய்யவும், 4 படங்கள் உருவாக்க மட்டுமே முடியும். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு க்ரோக் ஏஐ (Grok AI) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, க்ரோக் ஏஐ (Grok AI) சாட்பாட், தற்போது வெப் வெர்ஷ னில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.