tamilnadu

img

வேளாண்மை மற்றும் மீன்வளப்படிப்பு

ICAR என்று சொல்லப்படும் இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் நடத்தும நுழைவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்று, நாட்டில் உள்ள எந்த வேளாண்மைக் கல்லூரியிலும் சேர்ந்து கொள்ளலாம்.  அதோடு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் காந்திகிராம நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை நடத்தும் கலந்தாய்வுகளில் பங்கேற்றும் வேளாண்மைப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.  பிஎஸ்சியிலேயே வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு. பட்டு வளர்ப்பு, வணிக வேளாண்மை ஆகிய பிரிவுகள் உள்ளன. பிடெக் படிப்பில் வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுடபம் மற்றும் ஆற்றல்-சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய பிரிவுகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கு https://tnauonline.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 2024-25ம் கல்வியாண்டிற்கான, வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக விண்ணப்பிக்கும் முறை மே 7 முதல் தொடங்கியுள்ளது. ஜூன் 6-ம் தேதி வரை http://tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.