tamilnadu

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் கூடுதல் பொருட்கள்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் கூடுதல் பொருட்கள்

சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூலை 28 – திருப்பூர் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் நிலையில் ஒரே நாடு,  ஒரே ரேசன் திட்டத்தில் கூடுதல் ரேசன்  பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்  என மாவட்ட வழங்கல் அலுவலரிடம் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியா ளர் சங்கம் நேரில் கோரிக்கை வைத்துள் ளது. இது குறித்து மாவட்ட வழங்கல் அலு வலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: திருப்பூரில் வெளி மாநில, வெளி மாவட்ட மக்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் மூலம்  பொது விநியோகத் திட்டத்தில் பொருட் கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனி னும் வெளி மாநில, வெளி மாவட்ட  குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு  ஏற்ப இத்திட்டத்தில் பொருட்கள் முழு மையாக ஒதுக்கீடு செய்யப்படுவ தில்லை. குறிப்பாக, உள்ளூர் குடும்ப அட்டை தாரர்களுக்கு அந்தப் பகுதி யில் உள்ள நியாய விலைக் கடையில்  உள்ள குடும்பங்களுக்கு 20 ஆம் தேதிக்கு மேல் துவரம் பருப்பு, பாமா யில், பிஎச்எச் அரிசி ஆகியவை இருப் பின்மை ஏற்பட்டு விநியோகம் செய்ய முடிவதில்லை. இதனால் நியாயவிலைக் கடை விற் பனையாளர்களுக்கும், குடும்ப அட்டை தாரர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.  அதுவும் வெளி மாவட்ட குடும்ப அட்டை கள் அனைத்தும் பிஎச்எச் அட்டைக ளாகவே உள்ளன. மாத இறுதியில் என்பிஎச்எச் அரிசி இருப்பு உள்ளது. பிஎச்எச் அரிசி இருப்பு இருக்காது. எனவே பிஎச்எச் அரிசி அளவை அதி கரித்து வழங்க வேண்டும். அதேசமயம் சமூக ஆர்வலர்கள் என  சிலர் உள்ளூர் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என  வாதாடுகின்றனர். ஏற்கெனவே பொருட் கள் பற்றாக்குறை உள்ள நிலையில் அதி காரிகள் உரிய அளவு ஒதுக்கீடு இல்லா மல், பொருட்கள் வழங்கும்படி வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கின்றனர். எனவே பொருட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் உள்ளூர் குடும்ப அட்டைகளுக்கு உரிய ஒதுக்கீட்டைக் கூடுதல் படுத்தி வழங்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் கேட்டுக் கொண் டுள்ளனர்.