ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நீச்சலடித்து சாதனை படைத்த ஆட்டிசன் குறைபாடு மாணவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, துணைத்தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, நீச்சல் பயிற்சியளித்தனர். இப்பயிற்சி பெற்றவர்கள் கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 மாற்றுத்திறனாளிகள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்தனர்.