tamilnadu

img

குழந்தைகளுக்கு குழந்தை; அறிஞர்களுக்கு அறிஞர்

1873ஆம் வருசத்திலிருந்து மார்க்சின் உடல்நிலை வரவரச் சீர்கெட்டுக் கொண்டு வந்தது. தலைவலி, தூக்க மின்மை, அஜீரணம் ஆகிய எல்லாக் கோளாறுகளும் ஒன்று சேர்ந்து இவருடைய உழைப்புச் சக்தியைக் குன்றச் செய்துவிட்டன. வைத்தியர்கள் வழக்கம் போல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னார் கள். தினம் நான்கு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாதென்று கட்டளையிட்டார்கள். இந்த உத்தரவுகளினால், மார்க்சின் தேகநிலை சிறிது சீர்பட்டு வந்தது. ஆனால் பழைய மாதிரி இவர் வேலை செய்ய ஆவல் கொண்டதும், பழைய மாதிரியே நோய்க ளும் பின்தொடர்ந்தன. எந்தப் பொது விவகாரங்களி லும் தலையிடாமல் இருந்தார். ஆனால் போலீசாரின் கண்காணிப்பு மட்டும் இவருக்கு இருந்து கொண்டி ருந்தது. ஆரோக்கிய ஸ்தலங்களென்ற வழக்கப்பட்ட சில ஊர்களுக்குச் சென்று சிறிது காலம் தங்கினார். பலன் என்ன? தலைவலியும் தூக்கமின்மையும் இவரை விடவே இல்லை.

ஓயாத படிப்பு

இந்த நிலையிலும் மார்க்ஸ் ஓயாமல் படித்து வந்தார். படித்தவற்றிற்கு குறிப்புகள் எடுத்து வைத்தார். “காபிடலின்” இரண்டாவது பகுதியை விரைவிலே வெளியிட ஆவல் கொண்டு, கையெழுத்துப் பிரதியை ஒழுங்குபடுத்தத் தொடங்கினார். ஆனால் தொடர்ந்து வேலை செய்யும் சக்தி இவரை விட்டு ஓடிப் போய் விட்டது. கையெழுத்துப் பிரதியில் சில பக்கங்களே எழுத முடிந்தது. இந்த இரண்டாவது பகுதியை வெளி யிடுவதற்கு ஆதாரங்கள் தேடிக் கொண்டிருக்கிற போது, இவர் ருஷ்ய பாஷையைக் கற்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அப்படியே ஆறு மாதத்திற் குள் கற்றார்; அதில் புலமையும் அடைந்தார். ருஷ்ய நூல்களைப் படித்து இவர் சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் ஏராளம்.

ஐரோப்பாவின் பல பாகங்களிலும் புரட்சி எண்ணங் களை மரிக்க விடாமல் பாதுகாத்து வந்த இளைஞர் கள் பலர், இந்தக் காலத்தில் மார்க்சிடம் வந்து, தங்கள் அன்பையும், மரியாதையையும் செலுத்தி விட்டுப் போ னார்கள். இவர்கள் இவருடைய எழுத்துக்களினால் உணர்ச்சியும், ஊக்கமும் பெற்றவர்கள். இவர்களைப் பார்ப்பதும், இவர்களோடு மனங்கலந்து பேசுவதும் இவருக்குப் பெரிய ஆறுதலாயிருந்தன. இங்ஙனம் இளைஞர்கள் வந்து இவரைச் சந்தித்துக் கொண்டி ருந்தது தவிர, அரசியல் தலைவர்களென, தொழிலா ளர் இயக்கத்தின் தலைவர்களென பலரும்  இவரைக் கண்டு பேசிவிட்டுப் போவார்கள். இவர்களி டத்தில் தன் கருத்துக்களை ஒளிவு மறைவு இன்றிச் சொல்வார். சமரச மனப்பான்மையோடு பேசுகிறவர்க ளைக் கண்டால் இவருக்கு ஆத்திரம் வரும். அந்த ஆத்திரத்தையும் வெளிக் காட்டிவிடுவார். பொது வாழ்க்கையில் ஈடுபடாமல் ஒருவாறு அமைதியாக இருந்த இந்தப் பிற்கால வாழ்க்கையின் போது இவருடைய அன்றாட வேலைத் திட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதே கிடையாது. காலையில் ஏழு மணிக்கு எழுந்திருப்பார். காபி குடிப்பதென்றால் ஒரு ‘கப்’, இரண்டு ‘கப்’ அல்ல; நிறையக் குடிப்பார். குடித்துவிட்டுப் படிக்கச் சென்றுவிடுவார். பகல் இரண்டு மணி வரைக்கும் படிப்பார். சிறிது கூட இடத்தைவிட்டு நகராமல் படிப்பார். பிறகு மத்தியான சாப்பாடு. மறுபடியும் படிப்பு அறை. இரவு வரையில் படித்துக் கொண்டிருப்பார். பிறகு இராச் சாப்பாடு. அதற்கப்புறம், இஷ்டமிருந்தால் சிறிது தூரம் உலா வப் போவார். இல்லாவிட்டால் திரும்பவும் படிக்கச் கென்று விடுவார். விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி வரை படிப்பார்.

மருமகனின் வர்ணனை

இவர் படித்துக் கொண்டிருந்த அறையைப் பற்றி இவருடைய மருமகனான பால் லபார்க் பின்வருமாறு வருணிக்கிறார்: “மார்க்ஸ் படித்துக் கொண்டிருந்த அறை, வெளிச்சம் நிறைந்த அறை. தோட்டத்தின் பக்கமாக ஜன்னல் இருந்தது. அதற்கு எதிர்ப்புறத்தில் கணப்புச் சட்டி, அதன் அருகில் புஸ்தக அலமாரிகள். அலமாரிகளின் மேலே பத்திரிகைக் கட்டுகள், கையெ ழுத்துப் பிரதிகள் முதலியன கூரை வரை அடுக்கி யிருக்கும். ஜன்னலின் ஒருபுறமாக இரண்டு மேஜை கள். மேஜைகளின் மீது பத்திரிகைகள், புஸ்தகங்கள் முதலியன பரப்பப்பட்டிருந்தன. அறைக்கு மத்தியில் ஒரு சிறிய மேஜையும் நாற்காலியும் போடப்பட்டி ருந்தன. புஸ்தக அலமாரிகளுக்கும் இந்தச் சிறிய மேஜைக்கும் நடுவில் ஒரு சோபா உண்டு. இதில் தான் மார்க்ஸ் அவ்வப்பொழுது சாய்ந்து படுத்து ஓய்வு கொள்வார். சுவர்ப் பலகையின் மீது புஸ்தகங்கள், சுருட்டுத் துண்டுகள். தீப்பெட்டிகள், போட்டோ படங்கள் முதலிய சில்லரைச் சாமான்கள் பலவும் கலந்திருக்கும்... இந்தப் பத்திரிகைகள், புஸ்தகங் கள் முதலியவைகளை ஒழுங்காக அடுக்கி வைக்கி றோமென்று யாராவது சொன்னால் அதற்கு மார்க்ஸ்  இணங்க மாட்டார். ஆனால் தனக்கு தேவையான புஸ்த கத்தையோ, கையெழுத்துப் பிரதியையோ உடனே கண்டுபிடித்து எடுத்துக் கொள்வார். யாருடனாவது சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறபோது, ஏதேனும் ஒரு  புஸ்தகத்திலிருந்து மேற்கோள்காட்ட வேண்டுமானால், சட்டென்று குறிப்பிட்ட அந்தப் புஸ்த கத்தை எடுத்து தேவையான பக்கத்தைக் கண்டுபிடித்து விடுவார்... புஸ்தகங்களை அழகாக அடுக்கி வைக்க வேண்டுமென்பது இவருக்கு அவசியமில்லை. சிறிய தும் பெரியதுமாகப் புஸ்தகங்கள் இருக்கும். புஸ்தகத் தின் மேல் அமைப்பு, உள் எழுத்து முதலியவைகளைப் பற்றி இவர் கவலை கொள்வதில்லை. விஷயங்கள் இருக்க வேண்டும். அவ்வளவுதான். புஸ்தங்களைப் படித்துக் கொண்டிருக்கிறபோது, அடையாளத்திற் காக மேல் மூலையை மடித்து வைப்பார். முக்கியமான இடமாயிருந்தால், பக்கத்தில் பென்சிலால் கோடிழுப் பார். சில இடங்களில் ஆச்சரியக் குறியோ, கேள்விக்குறி யோ போடுவார். தான் அவ்வப்பொழுது எழுதுகிற குறிப்புகளைப் பிரதியொரு வருஷமும் படித்து, மறந்து போனவற்றை நினைவுபடுத்திக் கொள்வார். மார்க்ஸூக்கு ஞாபக சக்தி அதிகம்.”

மார்க்ஸ் ஒரு சிங்கம்

மார்க்ஸ், குழந்தைகளுக்குக் குழந்தை; அறிஞர்க ளுக்கு அறிஞர். குழந்தைகள் இவர் அன்புக்கு வசப்பட்டு இவரிடத்தில் சர்வ சுதந்திரத்தோடு விளை யாடுவார்கள். அறிஞர்கள், இவருடைய கூரிய அறி வுக்கு மதிப்புக் கொடுத்து, இவரோடு பேசுகிறபோது நிதானமாக பேசுவார்கள். இவரும் மற்றவர்களுடைய அறிவுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களோடு மரியாதை யாகப் பேசுவார். “மார்க்ஸ் ஒரு சிங்கம். சம்பாஷணை யின் போது மிக மரியாதையாக நடந்து கொள்கிறார்” என்று ஓர் அறிஞர் கூறுகிறார். இன்னோர் அறிஞர் சொல்கிறார்: “நான் ஒரு ஸ்காட்லாந்துக்காரன்; கன்ஸர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவன்; பொதுவாக, நாஸ்திகர்கள், யூதர்கள், ஜெர்மானியர்கள் ஆகிய இவர்களை வெறுக்கிறவன். ஆனால் மார்க்சின் முன் னிலையில் - அவர் ஒரு நாஸ்திகனாகவும், யூதனாக வும், ஜெர்மனியனாகவும் இருந்தபோதிலும் - இந்த  என்னுடைய வெறுப்புகள் பறந்து விடுகின்றன. ஒரே ஓர் உணர்ச்சி தான் என்னை ஆட்கொள்கிறது. அதுதான் மார்க்சினிடம் பக்தி” பொருளாதார விஷயங்களிலும் சமுதாய சீர்திருத்தப் பிரச்சனைகளிலும் மார்க்ஸ் ஒரு நிபுணர். இந்த நிபுணத்துவத்திற்கு இவருடைய சமகாலத்தவர் அதிகமான மதிப்பு வைத்திருந்தார் கள். இவரை “நடக்கும் அகராதி” என்றுதான் சொல் வார்கள். மார்க்ஸ் யாருடனும் நடந்து கொண்டே பேசுவார். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கூட இப்படி நடந்து கொண்டே பேசுவார். மனதிலே ஒன்று வைத்துக் கொண்டு வெளியிலே ஒன்று பேசுவதென்பது இவ ருக்குத் தெரியாது. உணர்ச்சி ததும்ப தன் அபிப்பிரா யங்களை வெளியிடுவார்.

குடும்ப வாழ்வு 

ஒழுக்கத்தில் மார்க்ஸ் மிகவும் கண்டிப்பானவர். ஸ்திரிகள் விஷயத்தில் புருஷர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது இவர் கருத்து. குடும்ப வாழ்க்கையில்தான், மனிதன், தன்னையும் இந்த உலகத்தையும் காணமுடியும் என்ற கொள்கை யை இவர் அனுஷ்டித்துக் காட்டி வந்தார். உலகத் தொண்டு என்று சொல்லிக் கொண்டு இவர் குடும்பத் தைத் துறந்துவிடவில்லை. தன்னுடைய சுக துக்கங்க ளில் தன் குடும்பத்தையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றார். மார்க்ஸ் குழந்தைகளிடத்தில் நிரம்ப பிரியமுடைய வர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செல்லப் பெயர் கொடுத்து அழைப்பார். அவர்கள் இவரை “மூர்” என்ற அழைப்பார்கள். இவருடைய தாடி மீசைக்காக வும், பார்வைக்கு முரடன் போல் காணப்பட்டதாலும் இந்தப் பெயர் கிடைத்தது போலும். இவருக்கு மொத்தம் - இறந்தது போக நான்கு குழந்தைகள். பெண்கள் மூவர்; ஆண் ஒருவர்; மூவரையும் நல்ல இடத்தில் விவாகம் செய்து கொடுத்தார். கடைசி காலத்தில் பேரப் பிள்ளைகளோடு கொஞ்சிக் குலாவும்படியான பாக்கி யம் இவருக்குக் கிடைத்தது.

துக்கம் மிகுந்த கடைசிக் காலம்

மார்க்சின் கடைசிக் காலம் நோயிலும் துக்கத்தி லுமே கழிந்தது என்று சொல்ல வேண்டும். இவரு டைய மனைவி ஜென்னி மார்க்ஸ். ஏற்கெனவே பிளவு உண்டாகி உடல் வலி குன்றியிருந்தவர் - 1881ஆம் வருசம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி இறந்து போனார். “அவரோடு மூரும் செத்துப் போய்விட்டார்” என்ற ஏங்கெல்ஸ் உணர்ச்சியோடு கூறுகிறார். இதன் பிறகு, மார்க்ஸ், உயிரோடு இருந்ததெல்லாம் சுமார் பதினைந்து மாத காலந்தான். இந்தப் பதினைந்து மாத வாழ்க்கையும் இறந்த வாழ்க்கையே தவிர, இருந்த வாழ்க்கையல்ல. மனைவியின் ஈமச்சடங்கிற்குக் கூட மார்க்ஸ் செல்ல முடியவில்லை. அப்பொழுது இவருக்குச் சுவாசப்பை சம்பந்தமான வியாதி ஏற்பட்டிருக்கிறது. இது சிறிது குணமானதும், வட ஆப்பிரிக்காவுக்கும் இன்னும் சில இடங்களுக்கும் தேக ஆரோக்கிய நிமித்தம் சென்றார். பயனில்லை. ஓயாத இருமல், சரியாக மூச்சு விட முடியாமல் திண்டாடுவார். இரவில் தூக்கமென் பதே கிடையாது. இந்த மாதிரி இவர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கையில் இவருடைய மூத்த பெண் - ‘பாரிசில் விவாகம் செய்து கொடுக்கப்பட்ட ஜென்னி லாங்கே’ - 1883ஆம் வருசம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி இறந்து போனார். இதனோடு இவர் மௌனியாகி விட்டார். தன் நோய்க்குப் பரிகாரம் தேடிக் கொள்ள  வேண்டுமென்ற எண்ணமே இவருக்குப் போய்விட்டது. வரவர வியாதியும் முற்றியது. கடைசியில் 1883ஆம் வருசம் மார்ச் மாதம் 14ஆம் தேதி பிற்பகல் இவர் கண்கள் மூடின; மூச்சு நின்றது.

ஏங்கெல்ஸ் வேதனை

மார்ச் மாதம் 17ஆம் தேதி லண்டன் ஹைகேட் மயா னத்தில் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார். அப்பொ ழுது ஏங்கெல்ஸ் ஓர் பிரசங்கம் செய்தார். அது வருமாறு:  1883ஆம் வருஷம் மார்ச் மாதம் 14 ஆம் தேதி பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு, உலகத்தின் மிகப் பெரிய சிந்தனையாளன்- இந்த கார்ல் மார்க்ஸ் - சிந்திப்பதை நிறுத்திவிட்டார். கடைசி சமயத்தில் சுமார் இரண்டு நிமிஷ நேரந்தான் இவரைத் தனி யாக விட்டு வைத்திருந்தோம். திரும்பிச் சென்று பார்க்கிற போது இவர் தனது நாற்காலியில் அமைதியா கத் தூங்கிக் கொண்டிருந்தார். அதுவே இவருடைய கடைசித் தூக்கம். தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராடிக் கொண் டிருக்கிற ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாளர்க்கும் மற்ற உலகத் தொழிலாளர்க்கும், சாஸ்திர ரீதியான சரித்திர ஆராய்ச்சிக்கும் இவருடைய மரணத்தினால் எவ்வளவு நஷ்டம் என்பதை இப்பொழுது அளந்து சொல்ல முடியாது. இந்த மகத்தான சக்தி மரித்து விட்ட தனால் உலகத்திற்கு எவ்வளவு நஷ்டம் என்பதை நாம் சீக்கிரத்தில் உணரப் போகிறோம்.

மனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந் தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார். மானிட சாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சிய டைந்தது என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்தார். மனி தர்கள், அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் முதலிய வைகளின் விஷயத்தில் கவனஞ் செலுத்துவதற்கு முன்னர் உண்ண வேண்டும், குடிக்க வேண்டும், நிழலில் இருக்க வேண்டும், உடுக்க வேண்டும். எனவே இந்த அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை உற்பத்தி செய்து கொள்வது அவசியம். இதற்குத் தகுந் தாற்போல்தான் ஒரு சாதியினுடைய அல்லது ஒரு காலத்தினுடைய பொருளாதார அமைப்பு இருக்கும். இந்தப் பொருளாதார அமைப்பை அடிப்படையாகக் கொண்டே மேற்படி சாதியினுடைய அல்லது காலத்தி னுடைய ராஜ்ய ஸ்தாபனங்கள், சட்டக் கொள்கைகள், கலைகள், மதக்கோட்பாடுகள் முதலியன அமையும். இந்த அடிப்படையை ஆதாரமாகக் கொண்டுதான் மேற்படி ராஜ்ய ஸ்தாபனங்கள் முதலியவற்றிற்கு வியாக்கியானம் செய்ய வேண்டும். இந்தச் சரித்திர உண்மை, மார்க்ஸ் காலத்திற்கு முன்னர், லட்சிய உலகத்திலே மறைந்து கொண்டிருந்தது. இந்த உண்மையை அறிஞர்கள் விபரீதமாக வியாக்கியா னம் செய்து கொண்டு வந்தார்கள். இதுமட்டுமல்ல, இன்றைய முதலாளித்துவத்தின் கீழ், உற்பத்தி முறை எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது. இதிலிருந்து எப்படி  பணக்கார கூட்டத்தினர் உற்பத்தியாயினர் என்பதை யும் மார்க்ஸ் கண்டுபிடித்திருக்கிறார். பொருளுற் பத்தி முறையில் உபரி மதிப்பு என்னும் புதிய அம்சத் தைக் கண்டுபிடித்த பிறகு, பொருளாதார சாஸ்திரிகள் இதுகாறும் எந்த இருளில் சென்று கொண்டிருந்தார் களோ அந்த இருள் அகன்று வெளிச்சம் உண்டா யிற்று.

இந்த மாதிரியான ஆராய்ச்சிகள் இரண்டு செய் தாலே ஒரு வாழ்க்கை பூர்த்தியடைந்துவிடும்.ஓர் ஆராய்ச்சி மட்டும் பூர்த்தி செய்தவர்கள் அதிருஷ்டசாலி கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் மார்க்ஸ் பல துறைகளில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றாவது மேலெழுந்தவாரியான ஆராய்ச்சியல்ல. கணித சாஸ்திரம் உள்பட இந்த மாதி ரியான ஆராய்ச்சிகளின் மூலமாக பல புதிய உண்மைக ளைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்.

மார்க்ஸ் ஒரு புரட்சி சக்தி

மார்க்ஸ் ஒரு விஞ்ஞான சாஸ்திரி, அப்படிச் சொல்லி விட்டதனால் மார்க்சை நாம் பூரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது. மார்க்சைப் பொறுத்தமட்டில் விஞ்ஞான சாஸ்திரமென்பது, சிருஷ்டிக்கும் தன்மை வாய்ந்த சரித்திரரீதியான ஒரு புரட்சி சக்தி. தத்துவ அளவில் எந்த உண்மையை இவர் கண்டுபிடித்தாலும் அதற்காக இவர் சந்தோசப்பட்டார். ஆனால் அதை விட அதிகமான சந்தோசம் இவருக்கு எப்பொழுது உண்டாயிற்றென்றால், தொழில் வளர்ச்சி, சரித்திர வளர்ச்சி முதலிய விஷயங்களில் புரட்சிகரமான மாற்றங் களை உண்டுபண்ணக்கூடிய உண்மைகளைக் கண்டு பிடித்தபோதுதான், உதாரணமாக இவர் மின்சார சக்தி யைப் பற்றிய ஆராய்ச்சி விஷயத்திலும் மார்ஸல் டெப்ரஸ் உழைப்பிலும் அதிகமான சிரத்தைக் காட்டி வந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்ஸ் ஒரு புரட்சி வாதி, முதலாளித்துவத்தின் கீழ் ஏற்பட்டிருக்கிற சமு தாய அமைப்பு. அதனால் சிருஷ்டிக்கப்பட்ட ராஜ்ய ஸ்தாபனங்கள் ஆகியவற்றை வீழ்த்துவதற்கு எந்த வகையிலாவது, யாருடனாவது ஒத்துழைக்க வேண்டு மென்பதும், அப்படியே இன்றைய தொழிலாளர் உல கத்திற்கு விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமென்ப தில் எந்த வகையிலும் யாருடனும் ஒத்துழைக்க வேண் டுமென்பதும் இவருடைய வாழ்க்கையின் சிறந்த நோக்கமாயிருந்தது. தொழிலாளர்களுக்குச் சமுதா யத்திலேயே ஓர் அந்தஸ்து உண்டென்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதையும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவர் இவர்தான்.

போராடுவது இவர் சுபாவத்திலேயே அமைந்திருந் தது. உற்சாகத்தோடும் உறுதியோடும் இவர் போரா டினார்; வெற்றியும் பெற்றார். ஒரு சிலருக்குத்தானே இந்த வெற்றி கிடைக்கிறது? இவர் பத்திரிகைகளுக்குப் பல கட்டு ரைகள் எழுதினார்; தர்க்கரீதியான பல வியாசங்கள் வரைந்தார். பாரீஸ், பிரஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் சங்கங்களை நிறுவினார். இவையனைத்திற் கும் சிகரம் போல் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை  ஸ்தாபித்தார். இந்த ஒரு வேலையே. ஒரு வாழ்நாள் முழு மைக்கும் போதுமானதாயிருக்கும். இதைக் கொண்டு இவர் பெருமை அடைவதற்கு நியாயம் உண்டு. மார்க்ஸ் தன்னுடைய காலத்தில் அதிகமாகத் துவே ஷிக்கப்பட்டார்; அதிகமாகத் தூஷிக்கப்பட்டார். சுயேச்சதி கார அரசாங்கங்களும், குடியரசு அரசாங்கங்களும் ஆக  எல்லா அரசாங்கங்களும் இவரைத் தங்கள் தங்கள் நாட்டி னின்று பிரஷ்டம் செய்தன. முதலாளிகளில் மிதவாதி களும் தீவிரவாதிகளும் எல்லோரும் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு இவரைத் தூற்றினார்கள். ஒட்டடை களை ஒதுக்கித் தள்ளுவதைப் போல் இந்தத் தூற்றல் களையெல்லாம் இவர் அலட்சியமாக ஒதுக்கித் தள்ளி னார். அவசியம் ஏற்பட்ட காலத்தில்தான் அவைகளுக்குப் பதில் கூறினார். ஐரோப்பாவின் கிழக்குக் கோடியிலுள்ள கலிபோர்னியாவின் கடற்கரையோரத்திலும் வேலை செய்து கொண்டிருக்கிற லட்சக்கணக்கான தொழிலா ளர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்டு அவர்களைத் துக்கத்திலே தவிக்கவிட்டுவிட்டு மார்க்ஸ் இறந்துவிட்டார். இவருக்கு அநேக எதிரிகள் இருந்திருக்கி றார்கள் என்பது வாஸ்தவம். ஆனால் மனிதனுக்கு மனிதன் என்ற முறையில் இவருக்கு ஒரு விரோதி கூடக் கிடையாது என்று நான் சொல்வேன். மார்க்சினுடைய வாழ்க்கையும் உழைப்பும் இன்னும் அநேக நூற்றாண்டு களுக்கு உயிரோடிருக்கும்.