சென்னை,டிச.15- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் புதிய காற்றழுத்தத் ்தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறி யிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும் ்பாலும் வறண்ட வானிலையே நில வும். சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வருகிற 17 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகிறது. இதன் காரணமாக 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதி யில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், டிசம்பர் 17,18, 19 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதி மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதி களில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதி களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.