தென்சென்னையில் தீக்கதிருக்கு 850 சந்தாக்கள் ரூ. 13.61 லட்சம் கே. பாலகிருஷ்ணனிடம் அளிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 850 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை 13 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாயை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனிடம், தீக்கதிர் பொறுப்பாளர்களான- சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச. லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். ஜெயசங்கரன் ஆகியோர் வழங்கினர். மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம். சிவக்குமார், கே. வனஜகுமாரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.