tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 கட்சிகள் நீக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.

நிவாரணம் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத் தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார்.

பாஜக நிர்வாகி ஜாமீன் வழக்கு

சென்னை: பாஜக மாநில செயலாளர் சி.பி.சக்கரவர்த்தி  மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், புகார்தார ரின் ஆட்சேபங்களை கேட்ட பிறகு, ஜாமீன் மனு மீது முடி வெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில தக ராறில் எஸ்டேட் காவலாளி சாதிப் பெயரைக் கொண்டு திட்டி,  தாக்கியதாக ஏற்காடு போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.