tamilnadu

img

நெல்லையில் 180 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையில் 180 டன்  குப்பைகள் அகற்றம்

திருநெல்வேலி, அக். 21- நெல்லை மாநகராட்சி ஆணையர் மோனிகா ரானா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டல பகுதிகளிலும் தினசரி நாள் ஒன்றுக்கு தூய்மை பணியாளர்கனை கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என சுமார் 180 டன் குப்பைகள் தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு இராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லபட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக நான்கு மண்டல பகுதிகளிலிருந்தும் செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் மக்கும் குப்பை மக்காத குப்பை என கூடுதலாக  சுமார் 198.5 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 18.5 டன் பட்டாசு குப்பைகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.