சென்னை, ஜன. 21 - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்கு களை ரத்து செய்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில், முதல்வ ரின் செயல்பாடுகள், டெண்டர் முறைகேடு, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இதற்காக அவர் மீது 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டது. இந்த செய்திகளை வெளியிட்ட முர சொலி ஆசிரியர் செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகி யோர் மீதும் வழக்குகள் தொடர பட்டன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பின ர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க. ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணை க்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைமை யிலான அரசு பொறுப்பேற்றது. அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது. அதேபோல், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப் பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளையும் திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பான விபரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக் கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்த மனுக்கள் மீது இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசாணையை ஏற்று, 18 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்தார்.