‘நாட்டைக் காப்போம்’ எனும் முழக்கத்தோடு குடிமைச் சமூகங்கள் முன்னெடுப்பில் அரசமைப்பு சட்ட பாதுக்காப்பு பரப்புரை கலைப் பயணம் திங்களன்று (அக்.2) தமிழ்நாட்டில் 6 மையங்களில் இருந்து தொடங்கியது. இதன் ஒருபகுதியாக சென்னைக் குழுவின் பரப்புரை பயண தொடக்க விழா எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.