tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“நிதியும் இல்லை,  அதிகாரமும் இல்லை”

கூடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைத்து தரப்படுமா? என்று நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பொன். ஜெயசீலன் வினவினார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச் சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “இந்த துறைக்கு நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநி லங்களைப் போன்று எல்லா பூங்காக்களும் டிஜிட்டல் சேவைத் துறையின் கீழ் செயல்படுவதில்லை. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் உள்ளிட்ட தொழில்நுட்ப பூங்காக் கள் தொழில் துறையிடம்தான் இருக்கிறது. எங்களிடம் நிதி யும் இல்லை, அதிகாரமும் இல்லை. நிதி, திறன் மற்றும் அதி காரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் கிடைக்கும்” என்றார்.  உடனே குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “துறைசார்ந்த பிரச்சனைகளை முதல்வரிடம் பேசி தீர்வு  காணுங்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்  நேர்மறையான பதில் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.  

திருச்சியில் சிவாஜிக்கு சிலை

சட்டமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின்போது, திருச்சி  பாலக்கரை பிரதாப் திரையரங்கம் அருகில்  9 அடி உயரத் தில் வெண்கலத்தில் நிறுவப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, 10 ஆண்டுகளாக சாக்குப் பையால் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதை திறக்க அரசு ஆவன செய்யுமா?  என திருச்சி கிழக்கு தொகுதி திமுக உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன், “அந்த சிலை செய்தித்துறை சார்பில் நிறுவப்பட்டது அல்ல. சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பாக நிறுவப்பட்டது. ஆனாலும், அந்த சிலையை திறக்க முடியாததற்கு காரணம்,  சாலை, நெடுஞ்சாலை, பொது இடங்களில் சிலை வைக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இருந்தா லும், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதால் முதல மைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும். மாவட்ட, மாநகராட்சி நிர்வாகிகளுடன் பேசி, வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் சிலை திறக்கப்படும்” என்றார். அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞர் அனுமதி பெற்று தான் அந்த இடத்தில் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் ஆட்சி மாற்றம் வந்தது. இதனால் சிலையை திறக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு  முன்பாகவே மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தற்போது, அந்த சிலையை வேறு ஒரு இடத்தி லாவது நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக் கிறார்கள். எனவே, இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முதலமைச்சரிடம் அனுமதி பெற்று, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பூங்கா ஒன்றில் அவரது  பெயரை சூட்டி அங்கு சிலை நிறுவப்படும்” என்றார். செவாலியே சிவாஜி கணேசனின் சொந்த ஊர் எனது திரு வாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வேட்டைதிடல் கிராமமாகும். எனவே, திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சிலை அமைக்க அரசு முன்வருமா? என்று துணைக் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், “சிவாஜி  கணேசன் பிறந்த ஊர் வேட்டைதிடல் என்பது இப்போதுதான்  எனது கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.

ரூ.1000 உதவித்தொகை

போதை தரக் கூடிய மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க  பறக்கும் படைகள் அமைக்கப்படும். 4 ஆவது பொது சுகா தார சர்வதேச மாநாடு சேலத்தில் நடத்தப்படும். ஓமந்தூ ரார் மருத்துவமனையில் ரூ.15 கோடியில் இதய உள்ளூ டுருவி கதிரியக்க ஆய்வகங்கள் நிறுவப்படும். புதிதாக 75  அவசர கால ஊர்திகள், 38 இலவச அமரர் ஊர்திகள் உள்ளிட் டவை ரூ.26.71 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் எச்ஐவி எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந் தைகள், 7,618 பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

பேரவையில் எதிரொலித்த வைகைப் புயல் நகைச்சுவை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர்  கோவிந்தராஜ், “தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு துறையின் அமைச்சர் மா.சுப்பிர மணியம் விளக்கம் அளித்தார்.  இதைத் தொடர்ந்து குறுக்கிட்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “நீட் தேர்வில் நீங்கள்  செய்த துரோகத்திற்குத்தான் 11 மருத்துவக் கல்லூரியை ஒன்றிய பாஜக அரசு பரிசாக அளித்தது. இது கிரி  திரைப்படத்தில் அர்ஜுன்-வடிவேலு ‘கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல’, நீட் தேர்வை நீங்க வெச்சிக்கோங்க, நாங்க  11 மருத்துவக் கல்லூரி வெச்சிக்குறோம் என்பதாகும்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக, அதை தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக என்றார். மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் சிவசங்கர், “தமிழகத் தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது உங்கள் ஆட்சிதான்.  கலைஞர் இருக்கும் போது நீட் வரவில்லை. அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போது நீட் தேர்வு வரவில்லை” என்று  பதிலடி கொடுத்தார்.

எல்லையில் நினைவு வளைவு

சென்னை: குமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைந்ததை நினைவுகூரும் வகையில் கேரளா- தமிழ்நாடு  எல்லையான களியக்காவிளையில் நினைவு தூண் நிறுவப் படுமா? என்று விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்  தாரகை கத்பர்ட் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு  பதிலளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு கன்னியாகுமரி மாவட் டத்தில் இந்த ஆண்டில் சிலை அமைக்க முதலமைச்சர் அனு மதி கொடுத்துள்ளார். எனவே, நினைவு வளைவு குறித்தும்  முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலை மைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்” என்றார்.