tamilnadu

சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

டமாஸ்கஸ், டிச.7- சிரியாவின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான லடாகியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி யுள்ளது. சிரியா, லெபனான் உள்ளிட்ட சில மேற்கு ஆசிய நாடுகள் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் ஆதரவோடு, மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பிளவையும் இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்கிறது. அதோடு, ஈரானைக் காரணமாகக் காட்டுகிறார்கள். ஈரானை அமெரிக்காவும் குறிவைப்பதால், இஸ் ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. டிசம்பர் 7 ஆம் தேதியன்று அதிகாலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் லடாகியா துறைமுகம் மீது ஏவுகணை களை வீசின. ஏராளமான சரக்குப் பெட்டங்கள் இந்தத் தாக்கு தலில் சேதமடைந்தன. கடந்த பல ஆண்டுகளாக போரால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு இறக்கு மதியாகும் பொருட்களில் பெரும்பாலும் இந்த லடாகியா துறைமுகத்திற்குதான் வந்து சேர்கின்றன. இறக்குமதிப் பொருட்களை சேமித்து வைக்கும் முக்கியமான இடமா கவும் லடாகியா இயங்கி வருகிறது.

சிரியா அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல ஏவுகணைகள் துறைமுகத்தின் மீது வீசப்பட்டன. பல சரக்குப் பெட்டகங்கள் தீப்பிடித்து எரிந்தன. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.” என்று கூறியுள்ளது. பொருட்கள் ஏராள மான அளவில் தீக்கிரையாகியுள்ளன. ஆனால் எவ்வளவு சேதம் என்பது  பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளி யாகவில்லை. சிரியாவின் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத்துவதை இஸ்ரேல் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. ஆனால், இதுவரையில் அத்தகைய தாக்குதல்களுக்கு அந்நாடு பொறுப்பேற்றுக் கொள்வ தில்லை. இதற்கு முன்பாக, சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள சர்வதேச விமான நிலையத்தையே குறிவைத்து தாக்கு தல்களை இஸ்ரேல் பல முறை நடத்தியிருக்கிறது.