கொச்சி:
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவிற்கு ஒன்பது மலையாள படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. லிஜோ ஜோஸ்பெல்லிசேரியின் ‘ஜல்லிக்கட்டு’, கீது மோகன்தாஸின் ‘மூத்தோன்’, பிரதாப் ஜோசப்பின் ‘ஒரு இரவு, ஒரு பகல்’, ஜே.கீதாவின் ‘ரன் கல்யாணி’, டாக்டர் பிஜுவின் ‘வெயில்மரங்கள்’ ஆகியவை திரையிடப்பட உள்ளன. ஷஹீன் ஷெரீப்பின் “வாட்ச்மேக்கர் அட் டைம்ஸ் எண்ட்” என்கிறஅனிமேஷன் படமும் தேர்வு செய்யப்பட் டுள்ளது.குறும்பட போட்டி பிரிவில் ஹிருத்திக்
தீபாவின் ‘21 மார்ச் 2014 ‘, பிரத்யுஷ் சந்திரனின்’ பூம்பாற்ற ‘, நேஹுல் ஹுதாவின் ‘ நூல் ‘ஆகியவை திரையிடப்படும். கோவிட்பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த மாதம் 30 ஆம் தேதி விழா நிறைவடையும்.