tamilnadu

img

திருமெய்ஞானம் தியாகிகளுக்கு செவ்வணக்கம்

தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானத்தில் தியாகிகள் அஞ்சான்- நாகூரான் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தியாகிகள் நினைவிடத்தில் ஞாயிறன்று அஞ்சலி செலுத்தினர்.கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் கொடியினை மாவட்டசெயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி ஏற்றி வைத்தார்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தஞ்சாவூர் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ஆர்.மனோகரன், அகில இந்தியவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தரங்கம்பாடி வட்ட செயலாளர் பி.சீனிவாசன், விதொச மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் சீனி.மணி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தமுஎகச மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், தலைவர் காவியன் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கலைச்செல்வி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் மாரியப்பன், மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், இராசையன், ரவிச்சந்திரன் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்க, விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர், வாலிபர், மாணவர், சிஐடியு மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட, வட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையங்கள் வைத்து, மலர் தூவி, வீர முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.

19.1.1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழக காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் திருமெய் ஞானத்தை சேர்ந்த அஞ்சான், நாகூரான் ஆகியோர் உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும்நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்துவது குறிப்பிடத்தக்கது.