இந்தியாவில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்தியில் மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதேச்சதிகார போக்குடன் நாட்டில் உள்ள சட்டங்களில் பல திருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. விவசாய திருத்த சட்டம் 2020, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை 2020, புதிய தேசிய கல்விக்கெள்கை 2020என மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பல சட்டங்களை திருத்தி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. அந்த வகையில் தற்போது தொழிலாளர்கள் நலச்சட்டத்தில் 8மணி நேரமாக உள்ள வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த பரிந்துரை செய்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரகம் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.