அரசியலமைப்பின் கூட்டாட்சி கோட்பாட்டை குலைக்கிறது
புதுதில்லி, ஜன.16- தேசிய புலனாய்வு முகமைக்கு கூடு தல் அதிகாரங்களை வழங்கி, மத்திய பாஜக அரசு அண்மையில் கொண்டுவந் துள்ள சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமான கூட்டாட்சி கோட்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில், சத்தீஸ் கர் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency- NIA) என்ற அமைப்பு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2008-இல் ஏற்படுத்தப்பட்டது. அப்போதே அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், அந்த புலனாய்வு முக மைக்கு, தற்போதுள்ள பாஜக அரசு கூடு தலான அதிகாரங்களை வழங்கியது, மீண் டும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ‘என்ஐஏ’ அமைப்பு கூட் டாட்சி அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிராக இருக்கிறது என்று கூறி, அர சியல் அமைப்புச் சட்டத்தின் 131- ஆவது பிரிவின் கீழ், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது.
“என்ஐஏ சட்டம் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் திறனுக்கு அப்பாற் பட்டது. அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அரசியல மைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் ஐஐ-இன் பிரிவு 2இன் படி காவல்துறை என்பது மாநில அரசாங்கத் தின் அதிகார வரம்புக்குள் வரக்கூடியதா கும். அவ்வாறிருக்கையில், காவல்துறை யின் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குவது அரசியலமைப்பிற்கு எதி ரானது. என்ஐஏ என்பதன் மூலம் மாநில காவல்துறையின் அதிகாரங்களை மீறும் ஒரு விசாரணை நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. மத்திய அர சுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையி லான அரசியலமைப்பு வரையறுத்த உறவு களை என்ஐஏ சீர்குலைக்கிறது.
அரசியலமைப்பின் கீழ் திட்டமிடப்பட் டுள்ள மாநில இறையாண்மை பற்றிய கருத்தை என்ஐஏ முற்றிலுமாக நிராக ரிக்கிறது. மாநிலத்தின் அதிகார எல் லைக்குள் செய்யப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதற்கான மாநில அரசுகளின் அதி காரத்தை முற்றிலுமாக பறிக்கிறது. மேலும், என்ஐஏ சட்டத்தின் பிரிவு 6 (4), 6 (6), என்ஐஏ சட்டத்தின் பிரிவு 7, 8 மற்றும் 10-இன் கட்டளைகள் அரசியலமைப்பு திட்டத்திற்கு முரணாக உள்ளன. பொது வாக, காவல் துறையினரால் விசாரிக்கப் படும் எந்தவொரு மாநிலத்தின் பிராந்திய அதிகார எல்லைக்குள் எழும் விஷயங் களை என்ஐஏ விசாரிக்கும் என்பது அட்ட வணை 7-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதி காரம். இந்தச் சட்டம் ஒரு தேசிய காவல் துறையை உருவாக்குகிறது. இது மாநி லத்தின் உரிமைகளை பாதிக்கிறது. எனவே என்ஐஏ சட்டம் அரசியல் அமைப்புக்கு எதி ரானது என்று அறிவிக்கப்பட வேண்டும்” என்று சத்தீஸ்கர் அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான கேரள இடது ஜனநாயக முன் னணி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது, என்ஐஏ விஷயத்தில், சத்தீஸ்கர் மாநில அரசு, ஜனவரி 15-ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளது. தேசியப் புலனாய்வு முகமையின் தலைமை அலுவலகம் தில்லியில் அமைந்திருக்கும் நிலையில், லக்னோ, ஜம்மு, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை, ராய்ப்பூர், ஹைதராபாத், கொச்சி ஆகிய 8 இடங்களில் என்ஐஏ-வின் கிளை அலு வலகங்கள் அமைந்திருக்கின்றன என் பது குறிப்பிடத்தக்கது.