திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

பிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...

புதுதில்லி:
வட கிழக்கு கலவரங்கள் வழக்கில் தற்போதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவருமான பிருந்தா காரத் பெயரையும் தில்லிக் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தில்லியில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்திற்குள் புகுந்த சங் பரிவாரக்குண்டர்கள் கடும்தாக்குதலை நடத்தினர்.இதைத்தொடர்ந்து கலவரத்தை நடத்தினர். கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசிய பாஜக தலைவர்கள் சுதந்திரமாக திரிந்துகொண்டு, பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ஆனால் அறவழியில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சியினர்மீது தில்லிக் காவல்துறையினர் பொய் வழக்குதொடுக்கின்றனர். மத்திய பாஜக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தில்லிக் காவல்துறையினர், ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளனர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்பெயரையும் தில்லி கலவர வழக்கில் சேர்த்துள்ளனர். பொய் வழக்கு தொடுக்கும் தில்லிக் காவல்துறையின் அராஜகச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே மற்றும் சட்ட ஆலோசகர் கீர்த்தி சிங் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய பாஜக அரசாங்கத்தின் அதிலும் குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கட்டளைக்கிணங்க, தில்லிக் காவல்துறையினர் வழக்கின் சாட்சிகள் இருவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் தங்கள் சங்கத்தின் புரவலர்பிருந்தா காரத் பெயரையும் ஒரு குற்ற அறிக்கையில் சேர்த்திருப்பதற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் பெயர் வட கிழக்குதில்லியில் முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்களுக்கு அவரும்பொறுப்பாவார் என்று கோரும் விதத்தில் பொய்யாகவும், போலித்தனமாகவும் சேர்க்கப்பட்டிருக் கிறது. அவரது பெயர் இருவர் அளித்ததாகக்கூறப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161ஆவது பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 161ஆவது பிரிவு வாக்குமூலம் என்பது காவல்துறையினரே சாட்சிகள் கூறியதாகப் பதிவு செய்துகொள்ளும் ஆவணமாகும். இதனை எந்தவிதத்திலும் நீதிமன்றங்கள் சாட்சியமாக ஏற்றுக்கொள்வதில்லை. இத்தகைய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே மதிப்புமிக்க அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொய்யாக வழக்குகளுடன் பிணைக்கப்பட் டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கருத்து கூறுபவர்களை வேட்டையாடுவதா?
குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக விமர்சனங் களைச் செய்திட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் முதலானவர்கள், தில்லிக் கலவரங்களுடன் சம்பந்தப்பட்ட குற்ற அறிக்கையில் பொய்யாகப் பிணைக்கப் பட்டு வருகிறார்கள். உண்மையில், வெறுப்புப் பேச்சை உமிழ்ந்து, வன்முறையைத் தூண்டியமற்றும் கலவரங்களுக்குப் பொறுப்பாளரானபாஜகவின் கபில் மிஷ்ரா போன்றவர்களைப் பிணைப் பதற்குப் பதிலாக, தில்லிக் காவல்துறையினர் கலவரங்கள் மேற்கொள்வதற்காக குடியுரிமைத்திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் களால் சதி செய்யப்பட்டதாக ஒரு கற்பனைக்கதையைப் பொய்யாக ஜோடனை செய்திருக்கிர்கள். அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்களை அச்சுறுத்துவதற்காகவும், அவர்களின் பேச்சுரிமை, அமைதியான முறையில் தங்கள் கருத்தைக் கூறும் உரிமையை மறுக்கும் விதத்திலும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நரவேட்டையாடுவதன் ஓர் அங்கமாகவே இத்தகையப் பொய்க்கதைகள் ஜோடனை செய்யப்பட்டிருக்கின்றன. 

 மத்திய அரசாங்கம், தன்னுடைய காவல்துறையினர் மூலமாக, உமர் காலித், நடாஷா நர்வால்,தேவங்கனா கலிதா, குல்ஃபிஷா பாத்திமா போன்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய முன்னணி ஊழியர்களைத் தொடர்ந்து வேட்டையாடி, சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை மிகவும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்திருக்கிறது.

நீதிபதி தலைமையில் சுயேட்சையான விசாரணை நடத்துக!
அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாவிட்டால் அது ஒரு குற்றம் கிடையாது. அரசின் கொள்கையுடன் வேறுபடுவதற்கான உரிமை, அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள உரிமையாகும். பாஜக அரசாங்கம், இந்தவிதத்தில் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன்மூலம் கருத்து வேறுபாடு கூறுவதைத் தடுத்திட முடியாது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசாங்கத் தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். இவ்வாறுபோராடுகிறவர்களையும், தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களையும் கிரிமினல்தனமாகக் கைதுசெய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வகுப்புக் கலவரங்களில் பொய்யாகப் பிணைக்கப்பட்டுள்ள அனைவரின் பெயர்களையும் நீக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் உடனடியாக சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
முஸ்லிம்கள் அதிகஅளவில் குறிவைக்கப் பட்ட தில்லி கலவரம் ஏற்படுவதற்காக உண்மையான காரணங்களை கண்டறிவதற்காக, வேறுபோலீஸ் துறையால் ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் சுயேட்சையான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது (ந.நி.)

;