tamilnadu

img

12 மணி நேரம் வேலை புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் எதிர்ப்பு

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மின் கட்டண உயர்வு ரத்து செய்வதுடன் மின் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரவையில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் முதல் அமைச்சர் நாராயணசாமியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர்.

அப்போது, 12 மணி நேர வேலை நேரத்தை மீண்டும் 8 மணி வேலை நேரமாக மாற்ற வேண்டும், மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், மின் கட்டண உயர்வினை திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் , மாநிலக்குழு உறுப்பினர் வெ. பெருமாள், மூத்த தோழர் டி. முருகன் மற்றும் பிரதேச குழு உறுப்பினர் ஆர். சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல் அமைச்சர் நாராயணசாமியிடம் சிபிஎம் தலைவர்கள் அளித்த மனு விவர வருமாறு:-

மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. தொழிலாளர்கள் காலம் காலமாகப் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக 4 சட்டங்களாகத் திருத்தி, தொழிலாளர் நல உரிமைகளை நீர்த்துப்போகச் செய்துள்ளது.மேலும் தொழிலாளர் வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரமாக உயர்த்தி மேலும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட 
நடவடிக்கை மேற்கொண்டுள் ளது.மத்திய அரசின் இத்தகைய மோசமான சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கம் போராடி வரும் வேளையில், புதுச்சேரி மாநிலத்திலும் எட்டு மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

வீரம் விளைந்த மண்...
புதுச்சேரி அரசின் இத்தகைய நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எட்டு மணி நேர உரிமைக்காகப் புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் 1936-ல் நடத்திய வீரம் செறிந்த போராட்டம், துப்பாக்கிச் சூட்டினால் 12 தொழிலாளர்கள் உயிர்த் தியாகம் செய்தது, அத்தொழிலாளர்களின் தியாகத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன் முதலில் புதுச் சேரியில் தான் 8 மணி நேர வேலை என்பது அமலாக்கப் பட்டது. இத்தகைய வரலாறு தாங்கள் அறிந்ததே. இப்படிப் பட்ட சூழ்நிலையில் வேலை நேரத்தை அதிகரிக்க தங்கள் அரசு வெளியிட்டுள்ள அரசாணை மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்...
கொரோனா நோய் தாக்கத் தால் புதுச்சேரியில் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஜூன் 1ஆம் தேதி முதல் ஒரு யூனிட் மின்சாரத் திற்கு ஐந்து பைசாவிலிருந்து முப்பது பைசா வரைக்கும் மின்கட்டண உயர்வினை அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை புதுச்சேரியில் அனைத்து பகுதி மக்களை  மிகக்கடுமையாகப் பாதிப்பதோடும், பொருளாதார ரீதியாக மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். எனவே அரசு அறிவித்துள்ள மின்சார கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கு நடவடிக்கையால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி அவதிக்குள்ளாகியுள்ள? நிலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அவசர அவசரமாகத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறது பாஜக அரசு.

குறிப்பாக யூனியன் பிரதேசங் களின் மின்சார விநியோகத்தை ஒற்றை வரியில் தனியாருக்குத் தாரை வார்க்கத் துணிந்து உள் ளது. இத்தகைய படுமோசமான நடவடிக்கை புதுச்சேரி மாநிலத் தில் உள்ள சிறு தொழில்கள், விவசாயிகள், நடுத்தர தொழில்கள் முழுமையும் நாசமாக்கக் கூடிய ஒன்றாகும்.மேலும் ஏழை எளிய மக்கள் மிகக் கடுமையான கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடும். எனவே மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

;