புதுச்சேரி, ஆக. 31- புதுச்சேரியில் உள்ளுர் ஊரடங்கு விலக்கி கொள்ளப் பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் திங்களன்று (ஆக.31) நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜ கான், தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார், மாவட்ட ஆட்சி யர் அருண், சுகாதாரத்துறை செயலாளர், முதல்வரின் தனிச்செயலாளர், காவல்துறை தலைவர் சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்மையில் 32 தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் அறி விக்கப்பட்ட ஊள்ளூர் ஊரடங்கை விலக்கி கொள்வது, மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிக்சை அளிக்க சுகாதாரத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பது, மத்திய அரசு அறிவித்துள்ள 4ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.