tamilnadu

img

பஞ்சாலைகளை மூடினால் போராட்டம் வெடிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கு சிபிஎம் கடும் எச்சரிக்கை

புதுச்சேரி, ஜன. 23- வேலையின்மை தலைவிரித்தா டும் நிலையில் ரோடியர் பஞ்சாலையை  மூடும் முடிவை புதுச்சேரி அரசு  கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் விடு தலைக்கு அடித்தளம் அமைத்துக்  கொடுத்து, சமூக பொருளாதாரத்தில் ரோடியர் (ஏ.எப்.டி), பாரதி, சுதேசி  பஞ்சாலைகளும் தொழிலாளர்க ளும் முக்கிய பங்காற்றி வந்துள்ள னர். நாட்டின் பொதுத்துறை நிறு வனங்களை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு பணியால் வேலை செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.  மோடி அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநரின் நடவ டிக்கையால் ரோடியர் மில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியோடு மூடப்ப டும் என்று செய்திகள் வருகின்றன. 2004ல் இதே பாஜக ஆட்சிதான் சுதேசி,  பாரதி மில்களை மூடுவதற்கான அறி விக்கையை மத்திய தேசிய பஞ்  சாலைக் கழகம் வழியாக வெளி யிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரி வர்க்க வெகுஜன அமைப்புகளும் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்தன. குறிப்பாக  2004-ல் ஜூலை 30-ல் புதுச் சேரி கிராமங்களை நோக்கி 72 கி.மீ நடைபயணம் நடைபெற்றது. இந்த இயக்கம் மக்களின் கவனத்தை ஈர்த்ததின் விளைவாக மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மாநில அரசே ஏற்றது. அதனைத் தொடர்ந்து, இடது சாரிகள் கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மாநில அரசி டம் ஒப்படைத்தது. இத்தகைய பின்பு லத்தில் ஏற்றெடுத்த சுதேசி, பாரதி  பஞ்சாலைகள் தற்போது மூடப் பட்டுள்ளது வேதனைக்குறியதாகும்.  ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூயிருப்பதாவது:- ரோடியர் பஞ்சாலையை மூடும் பணியை சிரத்தையோடு துணை நிலை ஆளுநர் செய்து வருகிறார். புதுச்சேரியின் வளர்ச்சியை தடுப் பது, முறைகேடாக தனியார் நிறு வனங்களில் பணம் பெறுவது, இருட்டில் தனது கட்சியை சேர்ந்த குற்றபின்னணி உள்ளவர்களுக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்குவது. காட்டையும், நாட்டையும் அழிக்கும் ஜக்கிவாசுதேவ், மதக் கலவரம் செய்து வரும் ஆர்எஸ்எஸ் மூலம்  பள்ளி மாணவர்களிடையே மக்களி டையே மதவெறியை தூண்டுவது போன்ற  சட்டத்திற்கு விரோதமான  செயல்களை  துணை நிலை ஆளு நர் கிரண்பேடி செய்து வருகிறார். மறுபுறம், ஆளும் காங்கிரஸ் அர சும் அதன் நிர்வாகமும் மெத்தனமாக செயல்பட்டு ஆலை மூடலுக்கு கார ணமாகியிருக்கிறது. குறிப்பாக என். ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஏராள மானவர்கள் கொள்ளை புறமான நிய மனங்கள், நிர்வாக சீர்கேடு  காரண மாக  கடந்த 5.11.2013-இல் இந்த  ஆலைக்கு லேஆப் விட்டு மிகப்  பெரிய அழிவை என்.ஆர். காங்கி ரஸ் அரசு தொடங்கி வைத்தது. மாநிலத்தில் மாறி மாறி  ஆட்சி  அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்க  ளின் தவறான கொள்கையாலும், அதி காரிகளின் நிர்வாகச் சீர்கேட்டாலும் புதுச்சேரி பஞ்சாலைத் தொழில்கள் படிப்படியாக சீரழிக்கப்பட்டு வந்தன. ஓர் அளவு இயங்கிக் கொண்டிருந்த சுதேசி, பாரதி மில்களில் முதற் கட்டமாக” டைஹவுஸ்” பிரிவு மூடப்பட்டும் அது படிப்படியாக மூடப்பட்டு தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. மத்திய ஜவுளி மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து நிதி உதவி பெற்று புதுச்சேரி பஞ்சாலைகளை மேம்படுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநி லங்களவை உறுப்பினருமான டி.கே.  ரங்கராஜன்,எம்.பி., வலியுறுத்தினார். மத்திய அரசிடம் நிதியுதவி பெற்று பஞ்சாலைகளைமேம்படுத்த புதுச்சேரி அரசு உறுதியான நடவ டிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் ,துறை அமைச்சர் கலந்து கொண்ட பஞ்சாலைகளை செயல்படுத்துவதற் கான கருத்து கேட்பு கூட்டத்தில் தற்  சமயம் இயங்குவதற்கு தகுதி யான தறிப்பிரிவை ரோடியர் பஞ்  சாலையில் செயல்படுத்த வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யதை புதுச்சேரி அரசு கண்டு கொள்ளவில்லை. இந்தியாவில் ஜவுளி பூங்கா ஆயி ரக்கணக்கில் திட்டமிடப்பட்டுள் ளது. காரணம் பஞ்சாலை ஒரு லாபகர மான தொழில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக நூறு  பஞ்சாலை துவங்கப்பட்டு லாபகர மான தொழிலாக நடந்து வருகிறது. இப்படி இருக்க மத்திய அரசு பஞ்சாலை நஷ்டம் என்று கூறி மூட  நினைப்பது ஒரு தவறான கொள்ளை யாகும்.   தற்போது, பல மாநிலங்களுக்கு ஜவுளிப் பூங்கா துவங்க நிதி ஒதுக்கி யுள்ளது. ஆனால் புதுச்சேரி துணை  நிலை ஆளுநர்  கிரண்பேடி ரோடியர்  ஆலையை மூடிவிட துடித்து கொண்டிருக்கிறார்.  பஞ்சாலை தொழிலை பாது காக்க மத்திய  அரசிடமிருந்து நிதி  உதவியும் பெறவில்லை. கோரிக்கை  கூட வைக்காத நிலையில் ஆலையை நிரந்தரமாக மூடுவதும், துணை நிலை ஆளுநர் மற்றும் மாநில ஆட்சியாளர்களின் பொறுப்  பற்ற நடவடிக்கைகளை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கண்டிக்கிறது. மூடிய பஞ்சாலைகளை மத்திய -  மாநில  அரசுகள் உடனடியாகத் திறந்து இயக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வேலை செய்த தொழிலாளிக்கு உரிய சம்பள பாக்கி களை உடனடியாக வழங்க  வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று பஞ்சாலை களை நவீனப்படுத்தி புதியவேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். புதுச்சேரியில் வேலையின்மை  தலைவிரித்தாடும் நிலையில் ஆலை களை மூடும் அரசுகளுக்கும், அதிகாரி களுக்கும் எதிராக மக்களை திரட்டி மாபெரும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜாங்கம் தெரிவித்திருக்கிறார்.

;