பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. ஊழியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். மாவட்ட சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், முருகையன், செல்வம் உட்பட திரளான ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக போராட்டம் நடைபெறும் இடத்திலேயே ஊழிர்கள் கஞ்சி காய்ச்சி வழங்கினர்.