tamilnadu

img

மாணவர்களுக்கான சிலம்பாட்டப் போட்டி

 பொன்னமராவதி, செப்.9-  புதுக்கோட்டை மாவட்ட சிலம்ப கழகம் மற்றும் பொன்ன மராவதி அடைக்கலம் காத்தார் சிலம்ப பாசறை சார்பில் பொன் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. மருத்து வர்கள் அழகேசன், மதியழகன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். 15- 17 வயதிற்குட்பட்ட ஜூனியர் பிரிவு, 26-30 வயதிற்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவு உள்ளிட்ட போட்டிகளில் 125 பேர் பங்கேற்றனர். இதில் புதுக்கோட்டை நரசிம்மன் சிலம்ப பாசறை முத லிடமும், மாமல்லன் சிலம்ப பாசறை இரண்டாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றன. பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றி தழை வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன், சுப்பையா ஆகியோர் வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை பொன்னம ராவதி அடைக்கலம் காத்தார் சிலம்ப பாசறை நிர்வாகி நாக ராஜன் செய்தார்.