புதுக்கோட்டை, நவ.19- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை விமர்சித்ததாகக்கூறி திருயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி மீது போலீசார் செவ்வாய்க்கிழமை யன்று நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். திமுகவில் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர் முன்னாள் அமைச்ச ரும் திருமயம் தொகுதி எம்எல்ஏ வுமான எஸ்.ரகுபதி. இவர் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கூட்டு றவு வாரவிழாவில் திமுக எம்எல் ஏக்களின் பெயர் போடாதது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது, திமுக எம்எல்ஏக் களை அரசு விழாவுக்கான அழைப்பிதழில் போடாததன் மூலம் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ் வரி அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளராக மாறிவிட்டார் என குற்றம் சாட்டினார். இந்நிலையில், மாவட்ட ஆட்சி யரை தவறாக விமர்சனம் செய்த தாகக் கூறி புதுக்கோட்டை மச்சு வாடியைச் சேர்ந்த கே.திவான் என்பவர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரியை விமர்சனம் செய்தது, பொய்யான தகவல்க ளைப் பரப்பியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் செவ்வாய்க்கிழமையன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.