tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா:- எம்.பி.க்களை பேச அழைப்பது மத்திய அமைச்சரின் வேலையல்ல.
ச.சா - இந்தப் பதவில இவர் நீடிப்பாரா...?!?
_ _ _

ஜி.எஸ்.டி. ஆணையர் சீனிவாச ராவ்:- ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை கோவை மண்டலத்தில் அதிகரிப்பு.
ச.சா - இழுத்து மூடுன நிறுவனங்க ளோட எண்ணிக்கையும் கோவைலதான அதிகம்..?!?
_ _ _

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி :- சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரி போடுவது தடுக்கப்பட்டுள்ளது 
ச சா - வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் மேல வரி போடுறது யாரு..?!?
_ _ _

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்:- 2024க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாக குடிநீர்.
ச.சா - அரசே வழங்குமா..?!?