உதகை, நவ.15- உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில் உதகை நகரில் கடந்த இரு நாட்களாக இரவு கடுங்குளிர் நிலவி வருகிறது. இத னால், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின் றனர். மேலும், உதகையில் உள்ள குதிரை பந்தய மைதானம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், உதகை அரசு தாவரவியல் பூங்கா, பிங்கர்போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் உறை பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது.