1815 - உலக வரலாற்றிலேயே முதன்முறையாக பல நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றாகக்கூடி, ஒப்பந்தங்களை உருவாக்கிய வியன்னா மாநாடு (காங்கிரஸ் ஆஃப் வியன்னா), ஐரோப்பியக் கண்டத்தில் ஒரு நீண்டகால அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கி, முடிவுற்றது. அதற்கு முன்பு வரை, நாடுகளின் தலைவர்க ளுக்கிடையே செய்திப் பரிமாற்றங்கள் மட்டுமே நடந்திருந்த நிலையில், பல நாடுகளையும் கட்டுப்படுத்தும், பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு இதுவே தொடக்கமாக அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, பேரரசர் நெப்போலியனின் விரிவாக் கங்களால், 23 ஆண்டுகளாக இடைவிடாத போர்களுக்குப்பின், 1814 மே-யில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1814 நவம்பரிலிருந்து இந்த மாநாடு நடைபெற்றது. உண்மையில் இது ஒரு மாநாடு என்ற வடிவில் இல்லாமல், அக்காலத்தின் பெரும் சக்திகளான இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரியா, பிரான்ஸ், சில நேரங்களில் பிரஷ்யா ஆகியவற்றின் பிரதிநிதிகளிடையே யான, நேரடி விவாதமாகத்தான் நடைபெற்றது.
பிற ஐரோப்பிய நாடுகளின் பிரதி நிதிகள், எல்லா விவாதங்களிலும் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அனுமதிக்கப்பட்டவற்றிலும் அவர்களின் கருத்துகள் கேட்கப்படவும் இல்லை. நாடுகடத்தப்பட்ட நெப்போலியன் வியப்புக்குரிய வகையில் தப்பிவந்து, நடத்திய நூறு நாள் ஆட்சியின்போதும், இந்த மாநாடு தொடர்ந்து நடத்தப்பட்டது. வாட்டர்லூ-வில் நெப்போலியன் இறுதியாக ஜூன் 18இல் தோற்கடிக்கப்படுவதற்கு 9 நாட்கள் முன்பாக, இம்மாநாட்டின் இறுதி முடிவுகள் கையெழுத்திடப்பட்டன. நெப்போலியப் போர்களின்மூலம் பிரான்ஸ் கைப்பற்றியிருந்த அனைத்துப் பகுதிகளும், அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியளிக்கப்பட்டதில், நிலப்பரப்புகளை பழைய நிலைக்குக் கொண்டுசெல்வதுடன், அதிகாரச் சமநிலையையும் கருத்திற்கொண்டு மாற்றங்கள் செய்யப்பட, நெதர்லாந்து என்ற ஒரு புதிய நாடும் உருவானது. புரட்சி, குடியரசு ஆகியவற்றை அதற்குமுன் கேள்விப்பட்டிராத அக்காலத்திய முடியரசர் கள், தங்களுக்கான ஆபத்தாக பிரான்சைப் பார்த்தார்கள் என்ற பின்னணியிலும் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மரபுவழி அரசர்களின் நன்மைக்காக, இத்த கைய இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்தி ருந்தாலும், 1848இல் பல ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சிகள் ஏற்பட்டன. இங்கி லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரஷ்யா ஆகிய பெரும் சக்திகளிடையே வியன்னா மாநாடு ஏற்படுத்தியிருந்த ஒருங்கிணைப்புக்கு, 1848இன் புரட்சிகளால் நெருக்கடியேற்பட்டபோது, அப்போதைய பெரும் சக்திகளான ஜெர்மனி, இங்கி லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா ஆகியவற்றுக்கிடையே பிஸ்மார்க் உருவாக்கிய புதிய ஒருங்கிணைப்பு முதல் உலகப்போர்வரை நீடித்தது.
- அறிவுக்கடல்