நாமக்கல், ஆக.8- நாமக்கல் மாவட்டத்தில் சனியன்று (ஆக.10) எட்டு நியாய விலைக் கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நடை பெறவுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: ஒவ்வோர் மாதமும் இரண்டாவது சனிக் கிழமை, பொது விநியோகத் திட்டம் மூலம், குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதன்படி, நாமக்கல் வட்டம் - ராசாம்பாளையம் நியாய விலைக் கடை, சேந்தமங்கலம் வட்டம் - முத்துகாப்பட்டி, ராசிபுரம் வட்டம் - ஒடுவன்குறிச்சி, கொல்லிமலை வட்டம் - நவக்காடு, மோகனூர்வட்டம் - மணப்பள்ளி, திருச்செங் கோடு வட்டம் - வெள்ளியம்பாளையம், குமாரபாளையம் வட்டம் -ஆவத்திபாளையம், பரமத்திவேலூர் வட்டம் - வீரணாம்பாளையம் ஆகிய நியாய விலைக் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. இதில், பொதுவிநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை தொடர்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கலாம். மேலும், பொது விநியோகத்திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், நுகர்வோர்கள் ஏமாற்றப் படுவது, குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை தெரி வித்தால் விரைந்து தீர்வு காணப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.