நாகப்பட்டினம்:
என்றென்றும் வர்க்கப் போராட்டத்தின் உந்து சக்தியாய்த் திகழும் வெண்மணி தியாகிகள் 52ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியில், வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.இந்த ஆண்டு நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து வந்து பேரெழுச்சியுடன் செவ்வணக்கம் செலுத்தியது உணர்ச்சிமிக்கதாக அமைந்தது. வெண்மணி நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் கே.பாலகிரு ஷ்ணன், எழுச்சி முழக்கங்களுக்கு இடையே கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்கக் கொடியை, மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஏற்றினார். சிஐடியு கொடியை மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஏற்றினார்.
செவ்வணக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், சி.பி.ஐ. தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.செல்வராசு, எம்.பி., நாகை மாவட்டச் செயலாளர் எஸ்.சம்பந்தம், தீக்கதிர் திருச்சிப் பதிப்புப் பொது மேலாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் வீரவணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து, மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களுக்கு இன்றைய அரசியல் நிலைமை பற்றியும், தில்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளின் வீரச் செறிவு பற்றியும் பேட்டியளித்தார்.
பொதுக்கூட்டம்
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவர்கள் கருத்துரையாற்றினர். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் நன்றி கூறினார்.
44 நெல் மூட்டைகள்
நாற்பத்து நான்கு தியாகிகள் நினைவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், 44 நெல்மூட்டைகளை, சி.ஐ.டி.யு. மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் சிஐடியு மாநிலச் செயலாளர்கள் சந்திரன், கருப்பையா, மாவட்டச் செயலாளர் சீனி.மணி, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆயிரம் இரு சக்கர வாகனங்கள்
வெண்மணி தியாகிகள் 52ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி வெள்ளியன்று தமிழகம் முழுவதும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் செங்கொடி ஏற்றி, பேரணி-கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.சங்கத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக வெண்மணி நோக்கி வந்து, வெண்மணி நினைவிடத்தில் சங்கமித்தனர். தஞ்சாவூரிலிருந்து மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி தலைமையிலும், திருவாரூரிலிருந்து மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா தலைமையிலும், நாகை மாவட்டம் கீழ்வேளூரிலிருந்து மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் தலைமையிலும், மயிலாடுதுறையிலிருந்து மாவட்டத் துணைத் தலைவர் காபிரியேல் தலைமையிலும், இருசக்கர வாகனப் பேரணிகள் துவங்கிவெண்மணி வந்தடைந்தன. இருசக்கர வாகன பேரணி நிகழ்வுகளில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், பொருளாளர்எஸ்.சங்கர், மாநில நிர்வாகிகள் எம்.சின்னதுரை, மா.கலைமணி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.நாகராஜ், ஆர்.வாசு, மாலதி, ஆ.மீரா, அ.வெற்றியழகன், கே.சித்தார்த்தன், பி.கந்தசாமி, ஜே.மாரியம்மாள், கே.சண்முகம், எம்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாலை வரை ஏராளமான பொதுமக்களும் வெளியூர்களிலிருந்து பல்வேறு இயக்கங்களின் ஏராளமான தோழர்களும் அணி அணியாக வாகனங்களில் வந்து வீர வணக்கம் செலுத்தினர். எஸ்.மோகன் இங்கர்சால் இயக்கப் பாடல்கள் பாடினார்.