ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

tamilnadu

நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை

நாகப்பட்டினம், ஏப்.15-நாகை மாவட்டத்தில் பூம்புகார், சாமந்தான்பேட்டை, நாகூர், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம் என 54 மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது மீன்பிடித் தடை காலம் தொடங்கியதால் படகு, வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகள் பழுதுபார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். தடை காலமான 61 நாளுக்கு அரசு இழப்பீடாக ரூ.5,000வழங்கி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மீனவர்கள் வேலையிழந்து வேறு வருமானம் இன்றித் தவிப்பதால் இந்தத் நிவாரணத் தொகையை ரூ.10,000 உயர்த்தி தர வேண்டும்என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

;