தேனி:
அக்குபங்சர் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான அ. உமர் பாரூக் எழுதிய “அழநாடு” நூல் வெளியீட்டு விழா கம்பத்தில்சனியன்று நடைபெற்றது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கம்பம் கிளை மற்றும் அறம் கிளை இணைந்து நடத்திய நிகழ்வுக்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் திரைக்கலைஞருமான சுருளிபட்டி சிவாஜி தலைமைவகித்தார்.
தேனி மாவட்டத்தின் தொல்லியல் சுவடுகள் தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட“அழ நாடு” நூலினை தேனி மாவட்டச் செயலாளர் அய். தமிழ் மணி வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். மாநிலதுணை பொதுச் செயலாளர் கவிஞர் அ.லட்சுமிகாந்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்திய தொல்லியல் துறையின் தலைமை தொல்லியலாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் கோவாவிலிருந்து இணையவழியில் சிறப்புரையாற்றினார். பாரதி தமிழ் இலக்கியப் பேரவைதலைவர் கவிஞர். பாரதன், தேனி மாவட்ட தமுஎகச தலைவர் இயக்குநர் இதயநிலவன், வைகை தொல்லியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவெல் பாரதி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக கம்பம்கிளைத்தலைவர் மருத்துவர்இன்பசேகரன் வரவேற்புரையாற்றினார். அறம் கிளையின் துணைச் செயலாளர் சே. அருண் குமார் நன்றியுரையாற்ற நிகழ்வு நிறைவடைந்தது.இந்நிகழ்வு நேரடியாக கம்பம் அரங்கத்திலும், இணைய வழியில் ஜூம்செயலி வழியாகவும், யு டியூப் நேரலைவழியாகவும் நடைபெற்றது.