tamilnadu

img

சிபிஎம் தென்காசி புதிய மாவட்டக் குழு உதயம்.... மாவட்டச் செயலாளராக உ.முத்துப்பாண்டியன் தேர்வு...

தென்காசி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டக்குழு உதயமாகியுள்ளது. மாவட்டச் செயலாளராக உ.முத்துப்பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழுவையும் பிரிப்பது என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் நவம்பர் 29 ஞாயிறன்று தென்காசியில் கட்சியின் மாவட்டசிறப்புப் பேரவைக்கூட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ் தலைமையேற்க, தி.கணபதி செங்கொடியை ஏற்றி வைத்திட, உ.முத்துப்பாண்டியன் வரவேற்றும், பி.வேலுமயில் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தும் பேசினார்கள். பேரவைக் கூட்டத்தை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். 

புதிய மாவட்டக்குழு
கூட்டத்தில் 25 பேர் கொண்ட தென்காசி மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டக்குழு கூடி, உ.முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் உட்பட, பி.ஜெயராஜ், பி.கணபதி பி.வேலுமயில், பி.உச்சிமாகாளி, எம்.தங்கம், எம்.வேல்முருகன், வி.குணசீலன் ஆகியோர் மாவட்ட செயற்குழுஉறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட னர்.தென்காசி மாவட்ட மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தொடரும் முற்றுகைப்போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவையை நிறைவு செய்து மாநிலசெயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பேசினார். தென்காசி வட்டார செயலாளர் அயூப்கான் நன்றி கூறினார்.

பேரணி - ஆர்ப்பாட்டம்
பேரவைக் கூட்டம் முடிவடைந்த பிறகு, தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நூற்றுக்கணக் கானோர் பங்கேற்ற பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு அனுமதி மறுத்து காவல்துறை யினர், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கே.ஜி.பாஸ்கரன், உ. முத்துப்பாண்டி யன் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

;