tamilnadu

விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி, ஏப்.21- கோவில்பட்டி அருகே பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த வடக்கு செமப்புதூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தசோமசுந்தரம் மகன் சண்முகவேல்(37). டி.சண்முகபுரத்தில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவர் விஷம் குடித்ததையடுத்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சனியன்று உயிரிழந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.