தஞ்சாவூர்:
தஞ்சை அருகே வல்லத்தில் சாஸ்த்ரா என்ற தனியார் பல்கலைக்கழகம் உள்ளது.இப்பல்கலைக்கழக விடுதியில் தங்கி சென்னை கே.கே.நகரைசேர்ந்த ரகுவரன்(30), பி.ஹெச்.டி படித்து வந்துள்ளார். வியாழக்கிழமை வகுப்புக்கு சென்று விட்டு விடுதிக்கு அவர் திரும்பினார். இதன்பின் ரகுவரன் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், மற்ற மாணவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அறையில் மாணவர் ரகுவரன் மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்த கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வல்லம்காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.