tamilnadu

img

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம்


தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள 4 யூனிட்டுகளில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளன.

     தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5  யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 5-வது மின்சார யூனிட் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

     இதன் காரணமாக சுமார் 4 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவை குறைந்து இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களிலும் ஒரு யூனிட் மட்டும் இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது யூனிட் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 1, 3, 4 ஆகிய யூனிட்டுகளில் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி 210 மெகா வாட்டாக குறைந்துள்ளது.