புத்தூர் மதகடி வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை
சீர்காழி, டிச.2- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் மதகடி என்ற இடத்தின் வழியே பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் அருகே பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் வழியே புத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு பகுதி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களுக்கும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வடிகால் வாய்க் கால் கடந்த இரண்டு வரு டங்களாக தூர்வாராததால் புத்தூர் கடைவீதி மற்றும் மதகடி பகுதியில் உள்ள குடி யிருப்புகளைச் சுற்றியும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் அதிகம் தேங்கி வடியாத நிலை ஏற்பட்டால் நெற்பயிர் நீரில் மூழ்கி வீணா வதுடன் குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புத்தூர் மதகடி யை ஒட்டியுள்ள வடிகால் வாய்க்காலை தூர்வார வேண் டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை
திருவாரூர் டிச.2- தொடர் மழையால் தொற்று நோய்கள் பரவா மல் தடுக்க குடியிருப்பு பகு திகளில் மழைநீர் தேங்கியி ருந்தால் அது குறித்து உட னடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலருக்கு தகவல் தெரி விக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டி பாதுகாப் பான முறையில் மக்கள் பயன் படுத்த வேண்டும். எந்த குடியிருப்பு பகுதி களாவது தொற்று நோய்கள் இருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடி யாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதி களில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்தார்.