tamilnadu

அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகள் : வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

திருவாரூர், மே 18- திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்படுகிறது. இப்போது நடை முறையில் உள்ள ஊரடங்கினால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. தேர்வாளர் கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் ஆன்லைனில் உரிய இணையதள மேடை வாயிலாக பயிற்சி அளிக்க உரிய வழிமுறைகள் வேலைவாய்ப்பு துறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  http://tamil naducareerservices.tn. gHv.in. என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தேர்வர் கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பக பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து, போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்விற்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மாதிரி தேர்விற்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குருப் - 2 தேர்விற்கான இலவச இணையதள வகுப்புகள் (Gblibe CHachibg Classes) திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மே 18 முதல் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04366- 224226 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித் துள்ளார்.