மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அரங்க கட்சி உறுப்பினர்களுக்கான காவிரி மண்டலப் பயிலரங்கம் டிசம்பர் 19,20 தேதிகளில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஜெஸ்டினா மஹாலில் நடைபெற்றது. ஜி.அரவிந்தசாமி தலைமை வகித்தார். இரா.ஹரிசுர்ஜித் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீ.மாரியப்பன் துவக்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, அ.அன்வர் உசேன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஊடகவியலாளர் இரா.சிந்தன், தமுஎகச மாநில துணை செயலாளர் களப்பிரன், ஆறு.பிரகாஷ் உள்ளிட்டோர் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு பல்வேறு தலைப்புகளில் வகுப்புகளை எடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் இரண்டு நாட்கள் நடைபெற்ற வகுப்புகள் பற்றி பிரதிநிதிகளிடம் இருந்து வந்த விவாதங்களுக்கு தொகுப்புரை வழங்கி நிறைவுரையாற்றினார். ஆனந்த் நன்றி கூறினார். இந்த பயில ரங்கத்தில் 108 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.