tamilnadu

img

கேரளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைத்திடுக.... அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் குட்டநாடு, சவரா சட்டப்பேரவைஇடைத்தேர்தல்களை தவிர்க்க மத்திய தேர்தல்ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தும், உள்ளாட்சி தேர்தலை குறுகிய காலத்துக்கு தள்ளிவைக்கவும் வெள்ளியன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: தற்போதைய சிறப்பு சூழ்நிலையில் சட்டப்பேரவை தேர்தல்களை நிறுத்தி வைக்கமத்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்ளவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்கவும் ஒத்த கருத்து ஏற்பட்டது.அதற்காக உள்ளாட்சி தேர்தலை நீண்ட காலத்துக்கு தள்ளி வைக்காமல், விரைவில் நடத்திடமாநில தேர்தல் ஆணையத்திடம் கோருவதாக
வும் முதல்வர் தெரிவித்தார்.

14 வது கேரள சட்டமன்றத்தின் பதவிக்காலம்2021 மே மாதத்துடன் முடிவடைகிறது. சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல்கள் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. முந்தையசட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 2011, 2016 இல்
நடைபெற்றன. அதன்படி, மாதிரி நடத்தை விதிமுறை 2021 மார்ச் 10 க்குள் நடைமுறைக்கு வரவாய்ப்புள்ளது. குட்டநாடு, சவரா சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் 2020நவம்பரில் நடத்தப்பட்டால், தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர் மூன்று மாதங்கள் (டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி) மட்டுமே வேலை செய்யமுடியும். தேர்தல் செலவுகள் மற்றும் பிற பொறுப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த காலஅளவு மிகக் குறைவாகும். மூன்றரை மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க செயலையும் மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்காது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன்பிரிவு 151 ஏ, ஒரு காலியிடத்தை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று கூறுகிறது. குட்டநாடு தொகுதியில் மாண்புமிகு உறுப்பினர் தாமஸ் சாண்டி இறந்ததால் 2019 டிசம்பர் 20 அன்று இந்த காலியிடம் உருவானது. சவராதொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது 2020 மார்ச் 8 ஆம் தேதி. குட்டநாடு தொகுதி காலியாகஅறவித்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அதேநேரத்தில், கோவிட் 19 இன் பரவல் நம்மைஉலுக்கும் பெரிய பிரச்சினையாக தொடர்கிறது.அரசாங்க அமைப்பு முழுவதும் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றக் கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த குறிப்பிட்ட கட்டத்தில் தேர்தல்களில் கவனம் செலுத்துவது பொருத்தமானதா என்று அனைத்து கட்சி கூட்டம் விவாதித்தது. குட்டநாடு மற்றும் சவரா இடைத்தேர்தல்கள் இப்போது நடைபெறக்கூடாது என்றும், அடுத்தஆறு மாதங்களில் எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையத்தைஒருமனதாகக் கேட்பது பொருத்தமானது என்றும்  கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.'

உள்ளாட்சி தேர்தல்  உடனடித் தேவை
பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் ஐந்தாண்டு பதிவிக்காலம் முடிந்து 2020ஆண்டு நவம்பரில் புதிய அமைப்புகள் பதவியேற்க வேண்டும். அது அரசியலமைப்பு கடமையாகும். உள்ளாட்சி அமைப்பின் தேர்தல்களைகுட்டநாடு, சவரா இடைத்தேர்தல்களுடன் ஒப்பிடமுடியாது. இரண்டிற்கும் இடையே முக்கிய வேறுபாடு உள்ளது. ஐந்தாண்டு நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவதுடன் மூன்று மாதங்களுக்குஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதை ஒப்பிடமுடியாது. கோவிட் நிலைமை உள்ளாட்சி தேர்தல்களுக்கும் பொருந்துமே என்று சிலர் கருதலாம். அது நியாயமானது. எவ்வாறாயினும், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள் என்பது அரசியலமைப்பு கடமையாகும். இருப்பினும், தேதியில் சிறிதளவு மாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய கடமை அரசியலமைப்பின் 243 இ மற்றும் 243 யூ பிரிவுகளின்படி உள்ளது.எனவே, உள்ளாட்சித் தேர்தல்களை அதிகமாகநீடிப்பது சாத்தியமில்லை.ஆனால் கோவிட் சூழ்நிலையில் இந்தத் தேர்தலை நடத்துவது குறித்து பல கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று மாநிலதேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் விரும்பவில்லை. கூட்டத்தில் அது பொதுவான கருத்தாகஇருந்தது என்று முதல்வர் கூறினார்.

;