திருப்பூர், டிச. 25– திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 5 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறிய தாவது: மாவட்டத்தில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகி றது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மாவட் டத்தில் 13 இடங்களில் நடைபெறுகிறது. எனவே டிச.25ஆம் தேதி மாலை5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும், 28 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை மற்றும் ஜன. 2 ஆகிய 5 நாட்களுக்கு, தமிழ் நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மது பானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மது பானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட்டு, மது பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.