tamilnadu

img

திருப்பூருக்கு வந்த மோடி புதிய திட்டம் எதையும் அறிவிக்கவில்லை!

திருப்பூர், மார்ச் 31 -


பிரதமர் நரேந்திரமோடி கடந்த பிப்ரவரி 10ஆம் தேதிதிருப்பூருக்கு வந்தபோது இங்கு ஈஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது உள்பட பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இது குறித்து சென்னையைச் சேர்ந்த வெல்பேர்பார்ட்டி ஆப் இந்தியா மாநிலச் செயலாளர் எம்.முகமதுகவுஸ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்தபிப்ரவரி 13ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்குசில கேள்விகளை அனுப்பி இருந்தார்.இதில் மோடி இங்கு வந்தபோது அறிவிக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், தனியார்நிறுவனங்களின் திட்டங்கள் எவை, அந்த திட்டங்களின் மதிப்பீடு எவ்வளவு என்று கேட்கப்பட்டிருந்தது.அத்துடன் மோடியின் வருகைக்கு திருப்பூர் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாநில அரசு, மத்திய அரசுசார்பில் தனித்தனியாக எவ்வளவு செலவிடப்பட்டது என்றும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.முகமது கவுஸின் கேள்விகளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், பொதுத் தகவல் அலுவலருமான ப.கீதாபிரியா கடந்த மார்ச் 6ஆம் தேதி பதில் அனுப்பி இருக்கிறார்.


இதில் புதிய திட்டங்கள், அதன் மதிப்பீடு தொடர்பானமுதல் கேள்விக்கு, "மனுதாரர் கோரியுள்ளவாறு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் பெருமாநல்லூர் வருகையின்போது புதிய திட்டங்கள் எதுவும்அறிவிக்கப்படவில்லை என்ற தகவல் மனுதாரருக்கு தகவலாக அளிக்கப்படுகிறது." என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் மோடி திருப்பூருக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டும், கிடப்பில் போடப்பட்டும் இருக்கும் சில திட்டங்களைத் தூசி தட்டி,புதிதாக அமல்படுத்துவது போல் நாடகம் ஆடியுள்ளார்என்பது இதன் மூலம் அம்பலமாகிறது. குறிப்பாக திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பிரச்சனைபத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருந்தாலும், அந்த இடம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் அதைப் பொருட்படுத்தாமல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது சட்ட விரோதமானது, நீதிமன்ற அவமதிப்பு செயலும் ஆகும்.அத்துடன் மோடி வருகையின்போது செய்யப்பட்டசெலவு விபரம் குறித்து விபரங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என்று தகவல் உரிமைச் சட்ட கேள்விக்குப் பதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் பாஜக பிரச்சார நிகழ்ச்சிக்கு செலவளிக்கப்பட்டதை வெளிப்படுத்தாமல் மறைத்துள்ளனர்.

;